மேலும் அறிய

வெற்றிக்கு ஊழியர்கள் தான் காரணம்! இன்ப அதிர்ச்சி கொடுத்த தனியார் நிறுவனம்

நிறுவனம் வளர்ச்சியடைய உறுதுணையாக இருந்த ஊழியர்களுக்கு கார் , இருசக்கர வாகனம் வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்த தனியார் நிறுவனம்

வெற்றிக்கு ஊழியர்கள் தான் காரணம்

சென்னையில் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட SURMOUNT LOGISTICS SOLUTIONS என்ற தனியார் நிறுவனம் அசாத்திய வணிக வெற்றிக்கு , அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தான் முதன்மைக் காரணம் என்பதை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டென்சில் ராயன் கருத்தில் கொண்டு , அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில்  20 ஊழியர்களுக்கு டாடா கார்கள் , ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு பைக் உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார்.

ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இது போன்று தங்களது ஊழியர்களை கௌரவிக்கும் மனிதவள கொள்கை கொண்டிருப்பது மிகவும் அரிதானது அதனை டென்சில் ராயனின் சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நிகழ்த்திக் காட்டியுள்ளது.

செலவு குறைந்த தீர்வுகள்

சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் கப்பல் மற்றும் தளவாடத் துறையில் புதிதாய் நுழைந்து 2 ஆண்டுகளில் பல சாதனைகளை சாத்தியப்படுத்தியிருந்தாலும் , வேகமாக வளர்ந்து வரும் உலக சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப , புதுமையான, திறமையான மற்றும் செலவு குறைந்த தீர்வுகளை வழங்குவதன் மூலம் வணிகங்களையும் நுகர்வோரையும் தொடர்ந்து சிறந்த சேவையின் பக்கம் ஈர்க்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம்
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.  

இதன் மூலம் , தாமதமான ஏற்றுமதிகள், வெளிப்படைத் தன்மையில்லாமை மற்றும் திறமையற்ற விநியோகத் தொடர் உள்ளிட்ட,  தளவாடத் துறையில் உள்ள பொதுவான சவால்களை எதிர்கொள்வதை சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வணிகங்களை எளிதாக்குவதே நோக்கம்

அனைத்து கப்பல் போக்குவரத்து தளவாட வணிகங்களை எளிதாக்குவதே தங்கள் நோக்கம் என கூறும் ,  சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும்,  நிர்வாக இயக்குனருமான  திரு. டென்சில் ராயன்,  பாரம்பரிய கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாட செயல் முறைகளில் தோல்வியை ஏற்படுத்தும் காரணிகளை தங்கள் நிறுவனம் புரிந்து கொள்கிறது என்கிறார்.

மேலும் தங்களது தீர்வுகள் மிகத் திறமையான சுற்றுச்சூழல் உணர்வுகளை உள்ளடக்கியது என்றும், இத்துறையில் ஒரு புதிய தரத்தை கட்டமைக்க தாங்கள் களமிறங்கி இருப்பதாகவும் அவர் கூறினார். 

வாடிக்கையாளர்களின் மனநிறைவு என்பது நிறுவனத்தின் முக்கிய மதிப்பு என்று சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உறுதியாக நம்புகிறது. அதன் மூலம் வணிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வணிகம் பெருகவும் வாய்ப்பு கிடைக்கும்.    

வியட்நாமில் புதிய கிளை 

சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஏற்கனவே தொழில்துறையில் நேர்மறையான சலனத்தை உருவாக்கி வருகிறது. வாடிக்கையாளர்களை திருப்தி செய்வதற்காக வணிக வாகனங்களில் அதிக முதலீடு செய்துள்ளது. குறிப்பாக, வியட்நாமில் கிளை அலுவலகத்தை நிறுவி சர்வதேச சந்தையில்  கால்தடம் பதித்துள்ளது.

எண்ட்-டு-எண்ட் சப்ளை செயின் (end-to-end supply chain) மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (logistics) ஆகியவற்றில் வாடிக்கையாளர் தேவைகளை கையாள,  தளவாட வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் பிரத்யேக குழுவை  சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: Medical Staff Vacancy : மருத்துவத் துறையில் 26 காலி பணியிடங்கள் - முழுவிபரம் இதோ...!

2028 - க்குள் எங்கள் இலக்கு இது தான்

மேலும், சரக்கு போக்குவரத்தின் மீது மிகச்சிறந்த கட்டுப்பாட்டைக் கை கொள்வதற்கும், நிலையான வாடிக்கையாளர் சேவையை அடைவதற்கும்,  உலகமயமாக்கலில் அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்,  2028 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக் நாடுகள் போன்ற பிரதான சர்வதேச சந்தைகளில் தங்கள் இருப்பை நிறுவ ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது. 

இவை எல்லாவற்றிற்கும் ஆதாரமாக, ஒரு வலுவான மனித வள மேம்பாடு மற்றும் பணியாளர் நலத் திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கமாக சர்மவுன்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கொண்டுள்ளது. இதன் மூலம், நிறுவனம் ஊழியர்களின் ஒட்டுமொத்த நன்மதிப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் உற்பத்தித்திறன், ஈடுபாடு மற்றும் தக்கவைப்பு ஆகியவற்றையும் மேம்படுத்துகிறது.

குழு செயல்திறன் மற்றும் கலாச்சாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் தலைமைத்துவ திறன்களை உருவாக்கும் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் பங்கேற்க ஊழியர்களை அவர்கள் ஊக்குவிக்கிறார்கள்.

இதையும் படிங்க: மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!

வாடிக்கையாளர் முன்னுரிமையில் கவனம் செலுத்தும் முடிவுகளை எடுக்கவும், அவ்வப்போது வாடிக்கையாளர் கருத்து அமர்வுகளை நடத்தவும், தயாரிப்புகள், சேவைகள் மற்றும் செயல்முறைகளை செம்மைப்படுத்த, அவற்றைப் பயன்படுத்தவும் அவர்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து அதிகாரம் அளிக்கிறார்கள். ஊழியர்கள் ஒரு பணியின் ஒரு பகுதியாக உணரும்போது, அவர்கள் தங்கள் வேலையில் பெருமிதம் கொள்கிறார்கள் மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்கு பங்களிக்கிறார்கள் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

மேலும், சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் ஆண்டு முழுவதும் ஊழியர்கள் ஈடுபாட்டுடன், அதிக இலக்குகளை அடையும் வகையில், அவர்களை ஊக்கபடுத்துவதை தங்களது லட்சியமாக கொண்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
Embed widget