இத்தனை பேர் ஆப்சென்ட்டா... குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 6959 பேர் எழுதலையாம்
அனைத்து மையங்களிலும் போலீசார் பாதுகாப்பணியில் பணியமடுத்தப்பட்டனர். இன்று நடைபெற்ற தேர்வில் 6,959 பேர்கள் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வை 36,558 பேர் எழுதினர். 6,959 பேர் எழுதவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குரூப் 4 தேர்வு வரும் இன்று நடைபெற்றது. குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை கடந்த 2ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தவர்களுக்கு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 215 காலியிடங்கள், ஜூனியர் உதவியாளர் பணிக்கு 1,621 காலியிடங்கள், ஜூனியர் உதவியாளர் 11 காலியிடங்கள், ஜூனியர் உதவியாளர் 46 காலியிடங்கள், ஜூனியர் வருவாய் ஆய்வாளர் பணிக்கு 239 காலியிடங்கள், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (அலுவலகம்) பணிக்கு 1 காலியிடம், ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட் பணிக்கு 2 காலியிடங்கள், தட்டச்சர் பணிக்கு 1,100 காலியிடங்கள், ஸ்டெனோ டைப்பிஸ்ட் (கிரேடு - III) பணிக்கு 368 காலியிடங்கள், தனிப்பட்ட எழுத்தர் பணிக்கு 2 காலியிடங்கள், உதவியாளர் பணிக்கு 54 காலியிடங்கள், கள உதவியாளர் பணிக்கு 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது.
மேலும் வனக் காவலர் பணிக்கு 62 காலியிடங்கள், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காவலர் பணிக்கு 35 காலியிடங்கள், வனக் கண்காணிப்பாளர் பணிக்கு 71 காலியிடங்கள், வனக் கண்காணிப்பாளர் (பழங்குடி இளைஞர்) பணிக்கு 24 காலியிடங்கள், வனக் காவலர் பணிக்கு 15 காலியிடங்கள் (கூடுதல் பட்டியல்), வனக் கண்காணிப்பாளர் பணிக்கு 50 காலியிடங்கள் (கூடுதல் பட்டியல்) என மொத்தம் 3,935 காலி பணியிடங்களுக்கு அலுவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள்.
அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் 43,517 பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் தஞ்சாவூரில் 49, பூதலூரில் 11, கும்பகோணத்தில் 34, ஒரத்தநாட்டில் 9, பாபநாசத்தில் 8, பட்டுக்கோட்டையில் 23, பேராவூரணியில் 7, திருவையாறு 9, திருவிடைமருதூரில் 5 என மொத்தமாக 155 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது.
விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வருகை தர வேண்டும். தேர்வு மையத்திற்குள் செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் அடுத்து வர அனுமதி இல்லை. கருப்பு பந்து முனை பேனாவை பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் முழுமையான சோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறுகிறதா என கண்காணிக்க மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு அதிகாரிகள் 40 பேரும், பறக்கும் படை அதிகாரிகள் 16 பேரும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அனைத்து மையங்களிலும் போலீசார் பாதுகாப்பணியில் பணியமடுத்தப்பட்டனர். இன்று நடைபெற்ற தேர்வில் 6,959 பேர்கள் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப் 4 தேர்வை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா, தாசில்தார் சிவகுமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.





















