ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?
பாதாம் உங்கள் உடலுக்கும் உங்களுக்கும் நல்ல ஊட்டச்சத்து அளிக்கும் சக்திவாய்ந்த ஆதாரமாகும். இதயம், எலும்புகளை வலிமையாக்க முயற்சித்தால் அதற்கும் பாதாம் உதவும்.
பாதாமில் நார்ச்சத்து, புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் அதிகம் ஆனால் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு அவை சிறந்தவை ஆகும்.
பாதாமில் குறிப்பிடத்தக்க வகையில் மெக்னீசியம் உள்ளது. இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவது உட்பட 300 க்கும் மேற்பட்ட உயிரியல் செயல்பாடுகளுக்கு மெக்னீசியம் தாது உதவும்.
பாதாம் உட்கொள்வது நாம் உட்கொள்ளும் அதிகப்படியான உணவைக் குறைக்கும் மற்றும் பசியை தீர்க்கும், எனவே இது எடை அதிகரிப்பதைத் தடுப்பது மட்டுமின்றி, குறைப்பதிலும் செயல்படுகிறது.
பாதாமில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். உடல்நல ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆரோக்கியமான வடிவமான உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) அதிகரிக்கிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ரதம் மற்றும் நார்ச்சத்து காரணமாக, கொஞ்சம் உட்கொண்டதுமே நிறைவான உணர்வு கிடைக்கும்.