Ind vs Eng Test: லார்ட்ஸ் டெஸ்ட்: இந்தியாவுக்கு 193 ரன்கள் இலக்கு! சேஸிங்கில் இந்தியாவின் சாதனை என்ன?
IND vs ENG Test: இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் மொத்தம் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில் அதன் சேஸிங் சாதனை எப்படி உள்ளது என்பதை இதில் காணலாம்

லார்ட்ஸ் டெஸ்ட்: இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி (IND vs ENG 3rd Test) லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறடு, இதில் இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் 387 ரன்களில் ஆட்டமிழந்தன. முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு யாருக்கும் முன்னிலை கிடைக்கவில்லை, இரண்டாவது இன்னிங்ஸ்லில் இந்திய அணிக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இதற்கு முன்பு, லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் சேசிங் சாதனை எப்படி இருக்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
லார்ட்ஸ்சில் இந்தியா சேசிங்:
லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா இதுவரை மொத்தம் 19 போட்டிகளில் விளையாடியுள்ளது, அவற்றில் 11 முறை சேசிங்கில் ஈடுப்பட்டுள்ளது. இவற்றில், லார்ட்ஸ் மைதானத்தில் சேஸிங் செய்யும் போது இந்திய அணி ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 1986 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்தியா அணி லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது. லார்ட்ஸில் இந்திய அணியின் சேஸிங் சாதனை இது தான். இங்கு மொத்தமாக இந்திய அணி சேஸிங் செய்யும் போது ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது, 7 முறை தோல்வியடைந்துள்ளது, மேலும் மூன்று முறை இந்தியா போட்டியை டிராவில் முடித்துள்ளது.
INDIA NEED 193 RUNS TO WIN THE LORD's TEST MATCH...!!!!
— Johns. (@CricCrazyJohns) July 13, 2025
- History awaits for Shubman Gill & his team 🇮🇳 pic.twitter.com/z86p7QnTMS
வாஷிங்டன் அசத்தல்:
இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கிய இங்கிலாந்து அணி பேட்டிங்கை இந்திய அணி பவுலர்கள் கபளீகரம் செய்தனர். முதல் செஷனில் சிராஜ், அகாஷ் தீப், பும்ரா அசத்த, உணவு இடைவெளிக்கு பிறகு வந்த வாஷிங்டன் சுந்தர் ரூட், ஜேமி ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் என மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இங்கிலாந்தை 192 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய முக்கிய காரணமாக அமைந்தார்.
அதிகப்பட்ச சேசிங்:
லார்ட்ஸில் நடந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 1984 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த அதிகபட்ச ரன் சேசிங் 344 ரன்கள் ஆகும். லார்ட்ஸ் டெஸ்டில் 300 ரன்களுக்கு மேல் என்ற இலக்கை எட்டிய ஒரே அணி மேற்கிந்திய தீவுகள் தான். மறுபுறம், இந்திய அணியால் 300 ரன்கள் என்ற இலக்கை கூட துரத்த முடியவில்லை, 200 ரன்கள் கூட துரத்த முடியவில்லை. லார்ட்ஸில் இந்திய அணியின் மிக வெற்றிகரமான ரன் சேசிங் 136 ரன்கள் ஆகும், இது 1986 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பெற்றது.





















