சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
Chengalpattu: "செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில், 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்"

"சென்னை வண்டலூரில் குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது"
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே தனியார் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. வண்டலூர் அருகே செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், 18 சிறுமிகள், தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விடுதியை உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா ஆகியோர் விடுதியை நடத்தி வந்துள்ளனர். விடுதியில் மாவட்ட குழந்தை நல அலுவலர்கள் ஆய்வுக்கு சென்றபோது, சிறுமிகள் பல்வேறு புகார்கள் அளித்துள்ளனர்.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
சிறுமிகள் அளித்த புகாரில், காப்பக உரிமையாளரின் ஓட்டுநர் பழனி, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பாக உரிமையாளர்களிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என அதிகாரிகளிடம் சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட, சிறுமிகள் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின், அடிப்படையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் தீவிர விசாரணை
காவல்துறையினர் முதற்கட்ட தகவலின் அடிப்படையில், உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா ஆகியோரை கைது செய்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் ஓட்டுநர் பழனியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட பிறகு அருள்ராஜ் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல், தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு இருந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















