மேலும் அறிய

மொராக்கோவின் உலக கோப்பை போராட்டமும் காலணி நாடுகளின் சிக்கலான பழிவாங்கலும்! ஒரு பார்வை

ஒட்டு மொத்த மொராக்கோவும் உலகின் பெரும்பாலான நாடுகளும் நேற்று நடைபெற்ற ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் மொராக்கோவும் பிரான்சும் மோதி கொண்டதை கண்டன. 

கால்பந்தில் இப்படி வரலாற்று சிறப்பு மிக்க போட்டி நடப்பது முதல்முறை அல்ல. இருந்தபோதிலும், போட்டியின் வரலாற்று சிறப்பு மிக்க தன்மையை ஒருவருக்கு பின் ஒருவராக வர்ணனையாளர்கள் மேற்கோள்காட்டி இருந்தனர். பிரான்ஸ் நடப்பு சாம்பியனாக உள்ளது.

1962ஆம் ஆண்டு, நடப்பு சாம்பியனான பிரேசில் கோப்பையை தக்க வைத்த பிறகு வேறு எந்த அணியும் கோப்பையை தக்க வைக்காத நிலையில், அதை முறியடிக்கும் முனைப்பில் பிரான்ஸ் உள்ளது.

மொராக்கோ, ஒப்பீட்டளவில், கால்பந்தில் ஒரு முன்னேற்றத்தை கண்டுள்ளது. உண்மையில், 1930இல் அமெரிக்கா மற்றும் 2002இல் தென் கொரியாவைத் தவிர, தென் அமெரிக்கா அல்லது ஐரோப்பாவை சேராத ஒரு நாடு, கால்பந்து உலக கோப்பையின் அரையிறுதியில் விளையாடியது இதுவே முதல் முறை.

இந்த உலகக் கோப்பையில் மொராக்கோ அரையிறுதிக்கு முன்னேறியது அற்புதமானது. அது, இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு கோலைக் கூட விட்டுக்கொடுக்கவில்லை, ஒரு செல்ஃப் கோலைத் தவிர, அதே வழியில் பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் போன்ற கால்பந்தின் சில ஜாம்பவான்களை வீழ்த்தியது.

ஆனால், நேற்று நடைபெற்ற போட்டியால் எழுந்த ஆர்வத்திற்கு இது மட்டுமே காரணம் என நினைத்தால், "கால்பந்து ஒருபோதும் கால்பந்தை பற்றியது மட்டும் அல்ல" என்ற பழமொழியின் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது. உலகக் கோப்பையில் சில விஷயங்களைச் செய்வதால் உலகை உயிர்ப்பிக்கிறது. 

கால்பந்து விளையாட்டின் மீதான தாக்கம், உற்சாகம் உலகளாவியது. உலகளவில் வெகுஜன ஈர்ப்பு கொண்ட ஒரே விளையாட்டு கால்பந்து மட்டுமே என்ற உண்மையை நிறுவியுள்ளது. இது உலகை ஒன்றிணைக்கிறது, மாற்று கருத்துகளை தவிர்க்கிறது என்று சிலர் நம்ப விரும்புகிறார்கள். ஆனால், இது கேள்விக்குரியது. இருப்பினும், இந்த உலகக் கோப்பையானது குறுகிய கால ஒற்றுமையை புதியதாக உருவாக்கியது என வாதிடலாம்.

எடுத்துக்காட்டாக, உலகக் கோப்பையை கத்தாருக்கு வழங்குவதற்கான ஃபிஃபா-வின் முடிவை பலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். மேலும், வளைகுடாவில் அரபு மொழி பேசும் மற்றும் முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடு இது போன்ற ஒரு மகத்தான விளையாட்டு நிகழ்வை நடத்துவது பொருத்தமற்றது என கருதினர்.

ஃபிஃபாவின் முடிவால் சவூதி அரேபியா மகிழ்ச்சியடையவில்லை: இரண்டு தசாப்தங்களாக அது பிராந்திய செல்வாக்கு தொடர்பாக கத்தாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளது. 2017 முதல் சில அரபு நாடுகள் கத்தாரை முற்றுகையிட சவூதி வழிவகுத்தது.

இரு நாடுகளும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் (ஜிசிசி) உறுப்பினர்களாக உள்ளன. சவுதி அரேபியா பழமைவாதத்திற்கான சக்தியாகக் கருதப்பட்டு அரபு வசந்தத்தை எதிர்த்ததால், சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கு விரும்பி ஈரானுடன் நெருக்கமான உறவை கத்தார் உருவாக்கியுள்ளது. 

இப்போது, ​​உலகக் கோப்பையைத் தொடர்ந்து, சவுதி அணியின் எதிர்பாராத வலுவான ஆட்டம், உலகக் கோப்பையின் முதல் சுற்றில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது உட்பட, கத்தாரை சவுதி அரேபியா அரவணைத்து கொண்டது. சவூதி மக்கள் இன்னும் கத்தாருக்கு படையெடுக்கிறார்கள். உண்மையில், முழு அரபு உலகமும் உலகக் கோப்பையை அரபுலகின் வெற்றி என்று கருதுகிறது.

ஆப்பிரிக்காவும் இந்த உலகக் கோப்பை ஏற்கனவே ஆப்பிரிக்கர்களுக்கு சொந்தமாகிவிட்டது என்று கூறுகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வி அடைந்த போதிலும், மொராக்கோ பிரான்சுக்கு எதிராக வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் மூன்று வாரங்களுக்கு முன்பு கற்பனை கூட செய்திருக்க முடியாதது.

தென் அமெரிக்கா, குறிப்பாக ஐரோப்பா, உலகக் கோப்பையில் விகிதாசார எண்ணிக்கையில் இடங்களைப் பெறுகின்றன. மேலும் ஆசிய, அரேபிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதற்கான கூக்குரல் வலுவடையும். அது நியாயமானது கூட. 

ஆனால் மொராக்கோ உலகில் தன்னை எவ்வாறு நிலைநிறுத்துகிறது? வரலாற்று ரீதியாக துணை-சஹாரா ஆப்பிரிக்காவுடன் மொராக்கோ நெருங்கிய உறவை கொண்டுள்ளது. ஆனால், வட ஆப்பிரிக்கா அல்லது மக்ரெப் பகுதி பல வழிகளில் வேறுபட்டுள்ளது. இதில், முரண் என்னவென்றால், மக்ரெப் பகுதி ஆழமாக பிளவுபட்டுள்ளது. 

மேலும், புவிசார் அரசியல் போட்டியாளரான அல்ஜீரியா மொராக்கோவின் உறவை 2021இல் முறித்துக் கொண்டது. இரு நாடுகளும் மேற்கு சஹாராவுக்காக சண்டையிட்டு கொண்டது. 1975 இல் மேற்கு சஹாராவை மொராக்கோ இணைத்து கொண்டது. அல்ஜீரியா அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சியை ஆதரித்து வருகிறது. 

இஸ்ரேலுடனான மொராக்கோவின் நெருங்கிய உறவு மொராக்கோவிற்கும் அல்ஜீரியாவிற்கும் இடையில் ஒரு உறைபனியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற அரபு மற்றும் ஆப்பிரிக்க உலகம் கொண்டாட்ட மனநிலையில் இருந்த போதிலும், அல்ஜீரியாவில், குறைந்த பட்சம், மொராக்கோவின் உலகக் கோப்பை வெற்றியை அரச தொலைக்காட்சியில் கூட தெரிவிக்கப்படவில்லை.

ஸ்பெயினுக்கு எதிரான வெற்றியை மொராக்கோ மற்றும் அரபு நாடுகளுக்கு மட்டுமே மொராக்கோ கால்பந்து நட்சத்திரம் சோபைன் பௌஃபல் அர்ப்பணித்தது மற்ற ஆப்பிரிக்க நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது. சமூக ஊடகங்களில் அவரது கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த காலத்தில் எளிதாக கேட்கப்படும் மன்னிப்பை அவரும் கோரினார்.

ஆனால், உண்மை என்னவென்றால் அரபு உலகிலும் மொராக்கோ வழக்கத்திற்கு மாறான நாடாக உள்ளது. உதாரணமாக, மொராக்கோ சிறிது காலத்திற்கு முன்பு இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கியது. அதற்கு ஈடாக மேற்கு சஹாரா மீதான இறையாண்மைக்கான உரிமைகோரல்களுக்கு அமெரிக்க ஆதரவைப் பெற்றது.

இஸ்ரேலின் கணிசமான மக்கள்தொகையில் மொராக்கோ யூதர்கள் உள்ளனர். சுமார் 10 மில்லியன் இஸ்ரேலின் மக்கள்தொகையில் சுமார் 5 சதவீதம் பேர் மொராக்கோ யூதர்கள் உள்ளனர். 

மேலும், இந்த உலகக் கோப்பையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மொராக்கோ வீரர்களால் பாலஸ்தீனியக் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டது கவனிக்கத்தக்கது. மொராக்கோ இஸ்ரேலுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக்கொண்டாலும் கூட, பாலஸ்தீனத்தின் பிரச்சினையில் அரபு உலகத்துடன் அதன் ஒற்றுமையை அடையாளம் காட்ட முயல்கிறது.

இருப்பினும், ஐரோப்பா மற்றும் குறிப்பாக பிரான்சுடனான மொராக்கோவின் உறவுகள் சந்தேகத்திற்கு இடமின்றி மொராக்கோவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான நடந்து முடிந்த அரையிறுதியை சமகால கலாச்சார மற்றும் அரசியல் வரலாற்றில் மிகவும் கடுமையான மற்றும் பதட்டமான தருணங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. 

உலகக் கோப்பையில் இருந்து டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் எழுச்சிக்கு முன், போர்த்துகீசியர்கள் மொராக்கோவின் கடற்கரை நகரங்களான அகடிர், எல் ஜடிடா (முன்னர் மசகன்), மற்றும் அசென்மூர் போன்ற நகரங்களை 1500 வாக்கில் கைப்பற்றி, அடுத்த சில தசாப்தங்களில் அவற்றின் மீதான கட்டுப்பாட்டை இழக்க நேரிட்டது என்பது அதிகம் அறியப்படாத உண்மை. 

ஸ்பெயின் இதேபோல் மொராக்கோவின் சில பகுதிகளை மத்திய தரைக்கடல் கடற்கரையில் காலனித்துவப்படுத்தியது, இந்த ஐரோப்பிய சக்திகள் தங்கள் மோசமான சுரண்டல் வரலாற்றைக் கொண்ட ஒரு அரபு மற்றும் ஆபிரிக்க நாட்டால் கால்பந்து போட்டியில் தோற்கடித்திருப்பது கொண்டாட்டத்திற்குரிய விஷயம்.

ஐரோப்பிய சக்திகளை பொறுத்தவரை, தங்கள் முன்னாள் குடியேற்ற குடிமக்களுக்கு விருந்தோம்பலைக் காட்டிலும் குறைவாகவும், சில சமயங்களில் வெளிப்படையான விரோதப் போக்கைக் கொண்டிருந்தாலும், அவர்கள் இன்னும் முன்னாள் காலனிகளில் உள்ள மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகளை வழங்கக்கூடிய இடங்களாக உள்ளன.

முக்கிய ஐரோப்பிய நகரங்கள் குடியேறியவர்களால் மாற்றம் கண்டுள்ளன. அரை நூற்றாண்டுக்கு முந்தைய பெரிய ஐரோப்பிய எழுத்தாளர்களால் அவர்கள் அடையாளம் காண முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

இதற்கிடையில், மகத்தான இன, மத மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையில் இருந்து தங்கள் சுதந்திரத்தை செதுக்கிய பல முன்னாள் காலனித்துவ நாடுகள், துரதிர்ஷ்டவசமாக தங்களை ஒருங்கிணைத்து வருகின்றன. சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதை இந்தியா நன்றாக வெளிப்படுத்துகிறது.

"கால்பந்து ஒருபோதும் கால்பந்தைப் பற்றியது மட்டும் அல்ல" என்ற பழைய பழமொழிக்குத் திரும்புகையில், இந்த உலக கோப்பை த்ரில்லராக மட்டும் அல்லாமல் அழகாகவும் இருந்தது. ஆபத்துகள், புதிர்கள் நிறைந்த விந்தையான தேசியவாதத்தை வெளிப்படுத்திய அதன் எண்ணற்ற ரசிகர்களின் பரவசமான பக்க நிகழ்ச்சிகளை வேறு எங்கும் காண முடியாது என்பதும் நிதர்சனமான உண்மை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget