MetturDam : மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு : டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு; விவசாயிகள் அதிர்ச்சி !
மேட்டூர் அணை " டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 22,500கன அடியிலிருந்து வினாடிக்கு 20,000கன அடியாக குறைக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 22,500கன அடியிலிருந்து வினாடிக்கு 20,000கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20,500 கன அடியாக சரிந்தது
கர்நாடகவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக, மேட்டூர் அணைவரலாற்றில் முழு கொள்ளவான 120 அடியை கடந்த ஜூன் 29-ம் தேதி 44வது முறையாக எட்டியது. பின்னர், அணை நீர்மட்டம் சரிந்து மீண்டும் கடந்த ஜூலை 5-ம் தேதி நடப்பாண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர், அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.
மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8 மணிக்கு நீர்வரத்து விநாடிக்கு 30,500 கன அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,100 கனஅடி, 16 கண் மதகுகள் வழியாக 7,900 கன அடி என மொத்தம் 30,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20,500கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 22,500கன அடியிலிருந்து வினாடிக்கு 20,000கன அடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்டம் மதகு வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
ஒகேனக்கல் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கடந்த 17 நாட்களாக மாவட்ட நிர்வாகம் தடை
ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் விதித்திருந்தது. நீர்வரத்து குறைந்ததையடுத்து ஒகேனக்கலில் பரிசல் இயக்க கலெக்டர் சதீஸ் நேற்று அனுமதி வழங்கினார். ஆனால், அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. நேற்று விடுமுறை தினம் என்பதால், சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், பரிசல் ஓட்டிகள் ஒரு மணி நேரம் மட்டுமே பரிசல்களை இயக்கினர். அதன் பின், கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், ‘ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 8 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து இருந்தால், மாமரத்துகடவு பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்கவும், 30 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து அதிகரித்தால், ஊட்டமலை பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்கவும், 50 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து அதிகரித்தால், மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளான கோத்திக்கல் பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்கவும் அனுமதியளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர். அதிகாரிகள் பேசியும் சமாதானம் ஏற்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை 20,500 கனஅடியாக சரிந்ததால் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் மூடப்பட்டது.




















