மேலும் அறிய

’’உதயநிதி ரசிகர் தலைவர் வேறென்ன செய்வார்? சினிமாவைப் பார்த்து சீரழியும் பள்ளிக் கல்வித்துறை'’ பொளந்த பாஜக!

"நோயை விட மருந்து கொடியது" என்பது போல, இந்த புதிய இருக்கை முறை மாணவர்களுக்கு நன்மையை விட, வாழ்நாள் பாதிப்புகளையே பரிசளிக்கும்.

திராவிட மாடல் அரசின் பள்ளிக் கல்வித்துறை, மாணவர்களின் எதிர்காலத்தையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொள்ளாமல், திரைப்படக் காட்சிகளைப் பார்த்து நிர்வாக முடிவுகளை எடுப்பது தீவிரமான கண்டனத்திற்குரியது என்று பா.ஜ.க. மாநிலச் செயலாளர் Dr. SG சூர்யா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’சமீபத்தில், பள்ளிகளில் மாணவர்கள் இனி 'U' வடிவத்தில் அமர வேண்டும் என்று ஒரு விசித்திரமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 'சிறு கறையை நீக்கப் போய், துணியையே பாழாக்கியது போல', இந்த அரசின் செயல் அமைந்துள்ளது.

ஒரு சிறிய சிக்கலைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு, அதனால் ஏற்படப்போகும் பெரும் பாதிப்புகளை யோசிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், "நோயை விட மருந்து கொடியது" என்பது போல, இந்த புதிய இருக்கை முறை மாணவர்களுக்கு நன்மையை விட, வாழ்நாள் பாதிப்புகளையே பரிசளிக்கும்.

உடல்நல மற்றும் கல்விசார் சிக்கல்கள்:

கழுத்து மற்றும் தோள்பட்டை வலி:

'U' வடிவ அமைப்பின் பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் மாணவர்கள், கரும்பலகையைப் பார்க்க வேண்டுமானால், நாள் முழுவதும் தங்கள் கழுத்தையும், தோள்பட்டையையும் ஒரே பக்கமாகத் திருப்பி வைத்திருக்க வேண்டும். இது அந்தப் பிஞ்சு உடல்களுக்கு எவ்வளவு பெரிய சுமை!

இந்த தொடர்ச்சியான அழுத்தம், கடுமையான கழுத்து வலி, தோள்பட்டை வலியோடு நின்றுவிடாமல், எதிர்காலத்தில் குணப்படுத்தக் கடினமான 'செர்விக்கல்' (Cervical Spondylitis) போன்ற தீவிரமான தண்டுவடப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

கண்ணாடி அணியும் மாணவர்களுக்குக் கூடுதல் பாதிப்பு:

கண்ணாடி அணியும் மாணவர்கள், இப்படி பக்கவாட்டில் திரும்பும்போது, கண்ணாடியின் மையப் பகுதியில் (Optic Centre) பார்க்காமல், அதன் ஓரப் பகுதியின் வழியே பார்க்க நேரிடும்.இது அவர்களின் கண்களுக்குக் கூடுதல் அழுத்தத்தைக் (Eye Strain) கொடுத்து, பார்வைத் திறனை மேலும் பாதிக்கும், கடுமையான தலைவலியை உருவாக்கும்.

ஆசிரியர்- மாணவர் தொடர்பு பாதிப்பு: இந்த முறையில் ஆசிரியரால் அனைத்து மாணவர்களுடன் நேரடிப் பார்வையை (Eye Contact) நிலைநிறுத்த முடியாது. இது கற்றல்- கற்பித்தல் செயல்பாட்டில் மிகப்பெரிய தடையாகும்.

சினிமா மோகமும், திறனற்ற நிர்வாகமும்

2006-ல் இலங்கையில் இதே போன்ற இருக்கை முறையைப் பின்பற்றியபோது, மாணவர்கள் தங்கள் தலையை சராசரியாக 30.71 டிகிரி திருப்ப வேண்டியிருந்தது. என்றும், கிட்டத்தட்ட 23% மாணவர்கள் 45 டிகிரிக்கு மேல் தலையைத் திருப்பியதால் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளானார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இதையெல்லாம் அறியாமல், மலையாளத் திரைப்படமான "Sthanarthi Sreekuttan" என்ற படத்தில் வரும் காட்சியைப் பார்த்து ஈர்க்கப்பட்டு இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பது வெட்கக்கேடானது. உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வி அமைச்சரானால், இப்படித்தான் சினிமா காட்சிகளைக் காப்பியடித்து நிர்வாகம் செய்வார் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

அமைச்சர் கவனம் செலுத்த வேண்டிய அவசரப் பிரச்சனைகள்:

சினிமா பார்த்து வெற்று விளம்பரத் திட்டங்களை அறிவிப்பதை விடுத்து, அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித் துறையில் புரையோடிப்போயிருக்கும் உண்மையான பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

அரசின் சி.ஏ.ஜி (CAG) மற்றும் தேசிய அடைவு கணக்கெடுப்பு (NAS) அறிக்கைகள் சுட்டிக்காட்டும் சில அவலங்கள் இதோ:

மாநிலம் முழுவதும் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறை. மாணவர்கள் மரத்தடியிலும், ஆய்வகங்களிலும் அமர்ந்து படிக்கும் அவலம். அரசுப் பள்ளிகளில் 18,862 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் (15.87%) உள்ளன.

தமிழக அரசின் கல்விக் கொள்கைப்படி, ஒவ்வொரு 5 கி.மீ.க்கு ஒரு உயர்நிலைப் பள்ளியும், 8 கி.மீ.க்கு ஒரு மேல்நிலைப் பள்ளியும் இருக்க வேண்டும். ஆனால், 2,133 குடியிருப்புகளுக்கு அருகில் உயர்நிலைப் பள்ளிகளும், 1,926 குடியிருப்புகளுக்கு அருகில் மேல்நிலைப் பள்ளிகளும் இல்லை என்ற அவலநிலை நீடிக்கிறது.

ஆய்வு செய்யப்பட்ட 108 பள்ளிகளில் 38 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவரே இல்லை அல்லது சேதமடைந்துள்ளது.

20%க்கும் அதிகமான மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முறையான அறிவியல் செய்முறைப் பயிற்சி கிடைப்பதே இல்லை.

யாரை ஏமாற்ற?

இத்தனை ஆயிரம் பிரச்சனைகள் தலைக்கு மேல் கத்தியாய்த்தொங்கும்போது, இவை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் சினிமா செட்டிங் போன்ற திட்டங்களை முன்னெடுப்பது யாரை ஏமாற்ற?

எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த ப வடிவ இருக்கை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். தேவையற்ற, ஆபத்தான திட்டங்களைக் கைவிட்டுவிட்டு, வகுப்பறைகளைக் கட்டுவதிலும், ஆசிரியர்களை நியமிப்பதிலும், மாணவர்களின் அடிப்படைக் கற்றல் திறனை மேம்படுத்துவதிலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கவனம் செலுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Teachers Promotion : ஆசிரியர்களுக்கு ஷாக்.! பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயமா.? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
ஆசிரியர்களுக்கு ஷாக்.! பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயமா.? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு.. மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில் - மதுரை எம்.பி !
சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு.. மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில் - மதுரை எம்.பி !
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?

வீடியோ

Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Embed widget