Nainar Nagendran: “சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ - நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், மக்கள் சோறு போட தயாராக இருப்பதாகவும், ஆனால் ஓட்டு போட மாட்டோம் என்று கூறுவதாகவும் தொண்டர் ஒருவர் தெரிவித்ததால், அவர் அதிர்ச்சி அடைந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும், தேர்தல் வேலைகளை தொடங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், பாஜக பூத் கமிட்டி ஆய்வுக்கு வந்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், அக்கட்சியின் தொண்டர் ஒருவர், சோறு கூட போடுறோ, ஆனா ஓட்டு போட மாட்டோம் என்று மக்கள் கூறுவதாக தெரிவித்து, அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
பாஜக பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரம்
தமிழ்நாட்டில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், தேர்தலுக்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் பாஜக பூத் கமிட்டி அமைத்து வருகிறது.
இந்நிலையில், விருதுநகரில் பூத் கமிட்டி ஆய்வுக்கு திடீரென சென்றார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். அங்குள்ள ரோசல்பட்டி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே, அவர் பூத் கமிட்டி ஆய்வுக்கு சென்றார்.
“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டுப் போட மாட்டோம்“
அப்போது, அங்கு வந்திருந்த பாஜக தொண்டர் ஒருவர், “நீங்கள் தேர்தலில் நில்லுங்கள், உங்களுக்கு சாப்பாடு கூட போடுறோம், ஆனா ஓட்டுப் போட மாட்டோம் என எல்லாரும் சொல்றாங்க“ என்று நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார் நயினார் நாகேந்திரன். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட பாஜக நிர்வாகிகள், அந்த தொண்டரிடம், அதைப் பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம் எனக் கூறி அவரை அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தால் நயினார் அதிர்ச்சியடைந்தாலும், அங்கிருந்த மற்றவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அந்த தொண்டரின் கருத்து மக்களின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிப்பதாக சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.
பொதுவாக இது போன்ற விஷயங்களில் அண்ணாமலை உஷாராக இருப்பார். அவரது அதிரடி நடவடிக்கைகள், பேச்சுக்களால், பாஜக தொண்டர்கள் அவர் அருகில் போவதற்கே யோசிப்பார்கள். ஆனால், நயினார் நாகேந்திரன் அடிப்படையிலேயே மென்மையான போக்கைக் கொண்டவர். இதனால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது. இதற்குப் பிறகாவது, அவர் கொஞ்சம் ஸ்ட்ரிக் ஆஃபீசராக மாறுவாரா என்று பார்க்க வேண்டும்.
தேர்தல் நெருங்கி வருவதால், இதுபோன்ற கட்டெண்ட்டுகளை கொடுக்காமல் இருப்பது கட்சிக்கு நல்லது. என்ன செய்வார் நயினார்.?





















