மேலும் அறிய
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
TVK General Body Meeting Vijay: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை விமர்சித்து பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தவெ.க. தலைவர் விஜய் - பொதுச்செயலாளர் ஆனந்த்
1/5

தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் இன்று (மார்ச் 28) நடைபெறுகிறது. இதில் தவெக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கறனர். ஆத்வ் அர்ஜூனா, பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் உரையாற்றினர்.
2/5

இஸ்லாமியர்களின் உரிமைகமைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதா ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், அதுவே ஒரே தீர்வாக இருக்கும்.பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை..பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க கூடாது, இருமொழிக் கொள்கையில் உறுதி, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை,மாநில அரசுக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.சமூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
3/5

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், “மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் போதாது அவர்களே, செயலில் அதை காட்ட வேண்டும் அவர்களே. ஒன்றிய பாஜக ஆட்சியையே பாசிச ஆட்சி என அறைகூவல் விடுத்துவிட்டு இங்க நீங்கள் செய்வது மட்டும் என்னவாம். அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாத ஆட்சி தானே நடைபெறுகிறது. ஒரு கட்சியின் தலைவராக ஜனநாயக முறைப்படி என கழக தோழர்களையும், எந்நாட்டு மக்களையோ சந்திக்க தடைபோட நீங்கள் யார்? தடையை மீறி மக்களை பார்க்க வேண்டும் என முடிவு பண்ணிட்டால் நான் போயே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்றே ஒரு காரணத்திற்காக தான் அமைதியாக இருக்கிறேன். அணை போட்டு ஆற்றை வேண்டுமானல் தடுக்கலாம். காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரணமான காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்தி மிக்க புயலாகக் கூட மாறும்.” என்று பேசினார்.
4/5

அதன்படி மொத்தம் 1500 பேருக்கு காலை உணவாக பொங்கல், வடை, சட்னி, சாம்பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தொடர்ந்து 2,500 பேருக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி, சாம்பார், மிளகு ரசம், தயிர் வடை உள்பட 22 வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
5/5

”ஜி.எஸ்.டி தொகையை வாங்கிக்கிறீங்க. ஆனால் பட்ஜெட்டில் தொகையை ஒதுக்க மாட்டேங்குறீங்க. தமிழ்நாட்டை பார்த்து கேண்டில் பண்ணுங்க சார். தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டுன மாநிலம் சார். பார்த்து பண்ணுங்க சார்.” என்று மத்திய அரசு செயல்முறைகளை சாடினார். பொதுக்குழுவு கூட்ட மேடையில் வேலுநாச்சியார், காமராஜர், அம்பேத்கர், பெரியார், அஞ்சலையம்மாள் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published at : 28 Mar 2025 02:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
நிதி மேலாண்மை
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement