பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்தியத் திருநாடு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று 2 நாடுகளாகப் பிரிந்தது.
1947காஷ்மீரின் சர்ச்சைக்குரிய இமயமலைப் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்.
1947மகாத்மா காந்தி நாதுராம் கோட்சேவால் கொல்லப்பட்டார்.
1948அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியா குடியரசு நாடானது.
1950சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1951எல்லை பற்றிய முரண்பட்ட கருத்துகளால் இந்தியா, சீனா இடையே போர் மூண்டது.
1962இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலமானார். லால் பகதூர் சாஸ்திரி ஜூன் 9, 1964 அன்று பிரதமர் ஆனார்.
1964போர் நிறுத்துமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டதை அடுத்து, காஷ்மீர் மீதான இந்தியா, பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது.
19651965 இந்திய- பாக் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட அடுத்த நாளில் சாஸ்திரி காலாமானார். இந்திரா காந்தி விரைவில் அடுத்த பிரதமர் ஆகிறார்.
1966கிழக்கு பாகிஸ்தானை ஒட்டி மீண்டும் இந்தியா- பாகிஸ்டான் இடையே போர் மூண்டது, விளைவாக வங்க தேசம் உருவானது.
1971இந்தியா முதல்முறையாக அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
1974இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்ததை அடுத்து, செய்திகள் தணிக்கை செய்யப்பட்டன; ஆயிரக்கணக்கானோர் சிறையில் தள்ளப்பட்டனர். 1977 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
1975இந்திரா காந்தி தேர்தலில் வென்று அதிகாரத்தைக் கைப்பற்றி, மீண்டும் பிரதமர் ஆனார்.
1980லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கு இந்தியத் தீவுகளைத் துவைத்த இந்தியா, உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
1983முன்னாள் விமானியும் விங் கமாண்டருமான ராகேஷ் சர்மா விண்வெளியில் கால் பதித்தார்.
1984அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயிலில் இருந்து ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே மற்றும் அவரின் பின்தொடர்வோரை அகற்ற, மத்திய பாதுகாப்புப் படை ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது
1984இந்திரா காந்தி தன்னுடைய சீக்கியப் பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் தொடங்கின.
1984போபாலில் அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி ஆலையில் விஷவாயு தாக்கியதில் 6,500 பேர் பரிதாபமாக பலி ஆகினர்.
1984காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறை வெடித்ததை அடுத்து, பாகிஸ்தானில் பதற்றம் மூண்டது.
1989தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக தற்கொலைப் படை நபரால் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
1991பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வென்றது. ஏராளமான பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
1991அயோத்தியில் 16-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட மசூதி, ராமர் பிறந்த இடம் என்று கூறி கரசேவகர்கள் இடித்தனர். நாடு முழுவதும் பதற்றம் வெடித்தது.
1992நாட்டின் தொழில் தலைநகரமான மும்பையில், முஸ்லிம்களால் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததில், 257 பேர் பலியாகினர்.
1993அடல் பிஹாரி வாஜ்பேயியைப் பிரதமராகக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது.
1998இந்திய ராணுவத்தின் பொக்ரான் சோதனைக் களத்தில் தொடர்ச்சியாக 5 நியூக்ளியர் வெடிகுண்டு சோதனையை, இந்தியா நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் சொந்தமாக சோதனை நடத்தியது.
1998இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் கார்கிலைச் சுற்றிலும் இருந்த ஊடுருவல்காரர்களைத் தாக்கும் வகையில் இந்தியா - பாகிஸ்தான் போர் நடைபெற்றது.
1999துப்பாக்கி ஏந்திய நபர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தினர். டெல்லி, பாகிஸ்தான் போராளிகள் மீது குற்ற சாட்டி, போக்குவரத்தை நிறுத்தியது. இஸ்லாமாபாத்துடன் தூதரகத் தொடர்பை முறித்துக்கொண்டது.
2001குஜராத் மாநிலத்தில் கோத்ரா என்ற இடத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதில், அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த 59 இந்து யாத்ரிகர்கள் மற்றும் கரசேவகர்கள் கொல்லப்பட்டனர்.
2002கோத்ரா ரயில் எரிப்புக்கு அடுத்த நாள் குஜராத் மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. இதில் 1000 பேர் பலியான நிலையில், முஸ்லிம்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
2002ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்து, மன்மோகன் சிங் பிரதமர் ஆனார்.
2004மும்பை புறநகர் ரயில்வேயில் 11 நிமிடங்கள் நடைபெற்ற 7 குண்டுவெடிப்புகளில் 189 பேர் கொல்லப்பட்டனர்.
2006மும்பையில் 10 துப்பாக்கி ஏந்திய நபர்கள், தொடர்ச்சியாக தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
2008தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கையாக NIA மற்றும் UAPA சட்டங்கள் அமலுக்கு வந்தன.
2009தனிப்பெரும்பான்மையுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெற்றி பெற்றதை அடுத்து, நரேந்திர மோடி பிரதமர் ஆனார்.
2014மோடி அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து, ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்குத் தடை விதித்தது. புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை அறிமுகம் செய்தது.
2016வயது வந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் விருப்பத்துடன் உறவில் இருப்பது குற்றமாகாது என்று 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டதோடு, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 377-ஐ நீக்கியது.
2018இந்தியாவில் முதல் கோவிட் -19 பெருந்தொற்று பதிவானது. கேரளாவில் 20 வயது இளம்பெண்ணுக்கு, முதன்முதலாக கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டது.
2020உங்கள் ப்ரௌசிங் அனுபவத்தை மேம்படுத்தவும் சிறப்பு பரிந்துரைகளை வழங்கவும் இந்த வலைத்தளம் குக்கீகள் அல்லது ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.