Tesla India Launch: இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
First Tesla Car in India: டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் காராக டெஸ்லா ஒய்(Y) எஸ்யூவி மின்சார காரை களமிறக்க தயாராகி வருகிறது. அதன் அறிமுகம் எப்போது.? விலை மற்றும் வசதிகள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் கால் பதிக்க தயாராகிவரும் அமெரிக்காவில் உள்ள உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், முதல் மாடலாக, டெஸ்லா ஒய் ரக எஸ்யூவி காரை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அந்த காரில் என்ன ஸ்பெஷல், அதன் விலை என்ன.? பார்க்கலாம்.
டெஸ்லா ஒய்-யில் என்னென்ன வசதிகள் உள்ளன.?
இந்த டெஸ்லா ஒய்(Y) மாடலில், 15 இன்ச் டேப்லெட் போன்ற டிஸ்ப்ளே, பின் இருக்கையில் இருப்பவர்களுக்கு தனியாக டச் ஸ்கிரீன், 12 வே பவர் அட்ஜஸ்டபிள் முன் இருக்கை மற்றும் ஹீட்டர் முன் மற்றும் பின் இருக்கைகள், டூயல் டோன் காலநிலை கன்ட்ரோல், வயர்லஸ் சார்ஜிங், பனோரமிக் கண்ணாடி ரூஃப் வசதிகளுடன் வருகிறது.
மேலும், செமி அட்டானமஸ்(தன்னிலை செயல்பாடு) தொழில்நுட்பத்துடன் வர உள்ளது. இதில், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன், 360 டிகிரி கேமரா, முன், பின்புற சென்சார்கள், கொலிஷன்(மோதல்) எச்சரிக்கை, அவசரகால பிரேக் உதவி ஆகிய வசதிகளும் இருக்கும்.
டெஸ்லா மாடல் ஒய்-யின் வேரியன்ட்கள் / எத்தனை பேர் பயணிக்கலாம்?
டெஸ்லா ஒய் மாடல், இந்தியாவில் புதிய தோற்றம் மற்றும் புதிய உட்புறங்களுடன் வர உள்ளது. டெஸ்லா மின்சார கார் தற்போது சர்வதேச அளவில் இரண்ட வேரியன்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. லாங் ரேஞ்ச் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் என 2 வேரியன்ட்டுகள் உள்ளன.
எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்
இரண்டு வேரியன்ட்டுகளுமே, டூயல் மோட்டார் அமைப்புடன், அதாவது முன்பக்க சக்கரங்களுக்கு ஒரு மோட்டாரும், பின் பக்க சக்கரங்களுக்கு ஒரு மோட்டாரும் என 2 மோட்டார்கள் இருக்கும். அதனால், அனைத்து சக்கரங்களுக்கும் ட்ரைவ்(AWD), அதாவது ஆல் வீல் ட்ரைவ் அம்சத்துடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்திய சந்தைக்காக, பின்பக்க சக்கரங்களுக்கு மட்டும் ட்ரைவ்(RWD) இருக்கும் வகையிலான மாடலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் உள்ள மோட்டார்கள் சக்திவாய்ந்ததாக இருக்கும். அதாவது, 0 - 100 Km/h வேகத்தை 5.9 விநாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்படுகிறது. அதிலும், AWD மாடல், 0 - 100 Km/h வேகத்தை 4.3 விநாடிகளில் எட்டிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரேஞ்சை பொறுத்தவரை, லாங் ரேஞ்ச் வேரியன்ட் 700 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். பெர்ஃபார்மன்ஸ் வேரியன்ட் 488 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.
எத்தனை பேர் பயணிக்கலாம்?
இந்த டெஸ்லா ஒய் மாடல் எஸ்யூவி எலெக்ட்ரிக் காரில் 7 பேர் வரை பயணிக்க முடியும்.
டெஸ்லா ஓய்-யின் விலை என்ன.?
டெஸ்லா நிறுவனத்திற்கு தற்போதைக்கு இந்தியாவில் உற்பத்தியை தொடங்கும் திட்டம் இல்லாததால், இந்த கார் அமெரிக்காவிலிருந்தே இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதனால், இதன் விலை 70 லட்சம் ரூபாய்(எக்ஸ் ஷோரூம்) வரை இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
டெஸ்லா நிறுவனம் உலகம் முழுக்கவே பிரபலமானது என்பதால், இந்திய சாலைகளில் அந்த காரை காண்பதற்கு பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த டெஸ்லா ஒய் மாடல் மின்சார கார் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















