Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்ஷன்
கணவர் விக்னேஷ் சிவனை நடிகை நயன்தாரா பிரியப்போகிறார் என்ற செய்தி பரவி வந்த நிலையில் அவரே இது தொடர்பாக பதிலளிடததுள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை நயன் தாராவை திருமணம் செய்தார். இவர்களது காதல் திருமணம் மாமல்லபுரத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு வாடகை தாய் மூலம் கடந்த 2022 ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது. இந்த குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகு என்று பெயர் வைத்தனர்.
இதனிடையே நடிகை நயன் தார படப்பிடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இவரது கணவர் விக்னேஷ் சிவனும் படங்களை இயக்கி வருகிறார். இச்சூழலில் தான் விக்னேஷ் சிவனை நயன்தாரா பிரியாப்போகிறார் என்று செய்திகள் வெளியானது.
அதற்கு முக்கிய காரணம் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்ததாகவும், அதில் முட்டாள்தனமாக இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொண்டால் நாம் தான் கஷ்டப்பட வேண்டியது வரும் என்று குறிப்பிட்டிருந்ததாகவும், பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் நயன் தார இப்படி ஒரு பதிவை போடவேயில்லை என்று அவர் தரப்பிஉல் இருந்து சொல்லப்பட்டது.
இந்தநிலையில் தங்கள் மீதான வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், விக்னேஷ் சிவனுடன் வேடிக்கைப் பார்ப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து , “எங்களைக் குறித்த வதந்திகளைப் பார்க்கும்போது எங்களின் ரியாக்ஷன்” என பதிவிட்டுள்ளார்.





















