800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்து N ராம் உதவியுடன் மாறன் சகோதரர்களின் பஞ்சாயத்தை ஸ்டாலின் முடித்து வைத்துள்ளதாக சொல்கின்றனர். தயாநிதி மாறனுக்கு 800 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் கிடைக்கும்படி டீலிங் முடிந்துள்ளதாக தெரிகிறது.
சன் குழும சொத்துகளை அதிகளவு கைப்பற்றிவிட்டதாக கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 8 பேருக்கு அவரது சகோதரரும், எம்பியுமான தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் கசிந்தது. 2003ல் சன் டிவியின் 12 லட்சம் பங்குகளை ஒரு பங்கு 10 ரூபாய் என்ற குறைந்த மதிப்புக்கு கலாநிதி மாறன் தனக்கு ஒதுக்கி கொண்டதாகவும், அதன் உண்மையான மதிப்பு 2500 முதல் 3000 ரூபாயாக இருக்கும் என்று புகார் எழுந்தது.
இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில், இதில் உண்மையில்லை என சன் தொலைக்காட்சி குழுமம் விளக்கம் அளித்தது. அதே சமயம், தங்கள் குடும்பப் பிரச்னை குறித்தான குற்றச்சாட்டு முற்றிலும் தனிப்பட்டது என்றும் சன் குழுமம் தெரிவித்தது.
மாறன் சகோதரர்கள் இடையிலான பஞ்சாயத்தை முடிவுக்கு வர முதலமைச்சர் ஸ்டாலின் களத்தில் இறங்கியதாக சொல்கின்றனர். அரசியல் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் மாறன் சகோதரர்களுடன் திமுகவுக்கு தொடர்பு இருப்பதால் தேர்தல் நேரத்தில் இது கட்சிக்கு அடியாக மாறிவிடக் கூடாது என ஸ்டாலின் நினைத்துள்ளார். மாறன் சகோதரர்கள் அவர்களது சகோதரி அன்புக்கரசி ஆகியோரை வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சுவார்த்தை நடத்தியதாக மணிகண்ட்ரோல் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் இந்து என்.ராமை வைத்து ஸ்டாலின் இந்த பிரச்னையை மொத்தமாக முடித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முதலில் தனியாக பேச்சுவார்த்தை நடத்தி சரிப்பட்டு வராததால், குடும்பத்தினருடம் நெருக்கமாக இருக்கும் வீரமணி மற்றும் ராம் பக்கம் ஸ்டாலின் திரும்பியதாக சொல்கின்றனர். ஜூன் கடைசி 2 வாரங்களிலும் ஜூலை முதல் வாரத்திலும் 3 சுற்று பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. அதில் 2 மீட்டிங் நேரிலும், ஒரு மீட்டிங் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நடந்துள்ளது. ஸ்டாலினின் தொடர் முயற்சி மற்றும் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு டீலிங்குடன் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக சொல்கின்றனர். அதாவது தயாநிதி மாறனுக்கு 800 கோடி ரூபாயும், சென்னை போட் கிளப் ஏரியாவில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1 ஏக்கர் நிலம் கொடுக்க கலாநிதி இறங்கி வந்து டீல் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாநிதி மாறன் 1500 கோடி ரூபாய் வேண்டும் என பிடிவாதமாக இருந்ததாகவும் ஆனால் கலாநிதி 500 கோடி ரூபாய் மட்டுமே தர தயாராக இருந்ததகாவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.





















