Rasipalan Today: கடகத்துக்கு ஆதரவு.. மகரத்துக்கு தெளிவு.. உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Rasi Palan Today (23-03-2025): இன்று பங்குனி மாதம் 09 ஆம் நாள், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today March 23, 2025:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்...
மேஷம்
வழக்கு பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மருந்து பொருட்கள் வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மனதில் சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உருவாகும். வரவுகள் தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் அவசரமின்றி செயல்படுவதன் மூலம் நன்மதிப்பு உருவாகும். வரவு நிறைந்த நாள்.
ரிஷபம்
காப்பீடு தொடர்பான பணிகளில் தனவரவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனம் விரும்பிய செயல்களை செய்து மகிழ்வீர்கள். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.
மிதுனம்
வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கேளிக்கை செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். இலக்கியம் குறித்த சில புரிதல்கள் மேம்படும். செலவு நிறைந்த நாள்.
கடகம்
எதிர்பாராத உறவினர் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். கல்விப் பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ப பாராட்டுக்கள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
சிம்மம்
விடாப்பிடியாக இருந்து நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வாரிசுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சி தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனை அளிக்கும். உடன்பிறப்புகள் வழியில் ஆதரவுகள் மேம்படும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய தொடர்புகளும் அறிமுகங்களும் ஏற்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முயற்சி மேம்படும் நாள்.
கன்னி
நெருக்கமானவர்கள் இடத்தில் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும். எதிர்பார்த்திருந்த சில அங்கீகாரங்கள் கால தாமதமாகவே கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் இடத்தில் பொறுமையை கையாளவும். வாகன விஷயங்களில் விரயங்கள் ஏற்படலாம். விவசாய பணிகளில் பாசன வசதிகளின் தன்மையை அறிந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. வெற்றி நிறைந்த நாள்.
துலாம்
சகோதரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். மனை விருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபார ரீதியான புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மறைமுகமாக இருந்துவந்த போட்டி பொறாமைகள் குறையும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் உருவாகும். மேன்மை நிறைந்த நாள்.
விருச்சிகம்
வாக்குறுதிகளை கொடுக்கும்பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணைவர் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். இலக்கிய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
தனுசு
தனவரவு மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் மனதில் உருவாகும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்திருந்த சில முயற்சிகள் காலதாமதமாக நிறைவேறும். கற்கும் திறன்களில் மாற்றங்கள் உருவாகும். மருத்துவ பணிகளில் இருப்பவர்களுக்கு வரவுகள் மேம்படும். அசதி நிறைந்த நாள்.
மகரம்
எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடி ஏற்படலாம். நண்பர்கள் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். பணிகளில் சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கலாம். புதுவிதமான பயணங்கள் மூலம் மாற்றங்களும், அனுபவங்களும் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.
கும்பம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த உயரதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். புண்ணியஸ்தலம் தொடர்பான பயணங்கள் மற்றும் சிந்தனைகள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.
மீனம்
தோற்றப்பொலிவு தொடர்பான விஷயங்களில் சிறுசிறு மாற்றங்களை செய்வீர்கள். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்களும் சிறு சஞ்சலங்களும் உருவாகும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த சில உதவிகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தீர்வும், வெற்றியும் ஏற்படும். நேர்மை வெளிப்படும் நாள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

