மேலும் அறிய

சிந்தடிக் ஓடுதளத்தில் முதன்முறையாக நடந்த தடகளப் போட்டிகள்: எங்கு தெரியுங்களா?

இன்று 12 வயது முதல் 20 வயது வரை உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில்  ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின்னொளி மற்றும் சிந்தடிக் ஓடுதளத்தில் நேற்று இரவு முதல்முறையாக தடகள போட்டிகள் தொடங்கியது. இந்த போட்டிகள் இன்று வரை நடக்கிறது.

தஞ்சை மாவட்ட விளையாட்டு அரங்கமான அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், வாலிபால் மைதானம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மேலும் இங்கு நவீன உள் விளையாட்டரங்கம், டென்னிஸ் அரங்கம், இறகுப்பந்து மைதானம்,  உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவையும் உள்ளன. ஏராளமான விளையாட்டு வீரர்கள் இங்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கியமாக தடகளப்போட்டிகளில் பங்கேற்கும் தஞ்சை மாவட்ட வீரர்கள் இதுதவிர நவீன சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு கைப்பந்து விளையாட்டு விடுதியும் இதன் அருகிலேயே செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்கள்.


சிந்தடிக் ஓடுதளத்தில் முதன்முறையாக நடந்த தடகளப் போட்டிகள்: எங்கு தெரியுங்களா?

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள உயர்தரத்தில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையிலும், விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஏதுவாகவும்  மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ்  ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிந்தடிக் ஓடுதளம் மற்றும் மின்னொளி விளக்குகள் அமைக்கப்பட்டு, கடந்த மே 5 ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து இந்த  சிந்தடிக் ஓடுதளத்தில் முதன்முறையாக தடகள போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், டெல்டா மாவட்டங்களின் தடகள சாம்பியன்ஷிப்-2025 போட்டிகள் நேற்று இரவு தொடங்கி, இன்று இரவு (ஜூலை 13) நிறைவு பெறுகிறது. இதில் விளையாட்டு போட்டிகளை தஞ்சாவூர் எம்.பி. ச.முரசொலி, திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து 6, 8, 10 வயது மாணவ, மாணவிகளுக்கு 40 மீ, 50 மீ, 60 மீ, 100 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 6 வயது முதல் 10 வயது வரை உள்ள பள்ளி,  மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் தங்களது திறமைகளை காட்டி அசத்தினர்.

தொடர்ந்து இன்று 12 வயது முதல் 20 வயது வரை உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

தொடக்க விழா நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சதயவிழா குழுத் தலைவர் து.செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மருத்துவர் சுந்தர், மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், தஞ்சாவூர் தடகள சங்க செயலாளர் செந்தில், இணைச் செயலாளர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டிகளை தஞ்சாவூர் தடகள சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு துறையின் நடுவர்கள் ஒருங்கிணைத்தனர். விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இதில் உற்சாகமாக பங்கேற்றனர்.

தலைப்பு செய்திகள்

சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget