மேலும் அறிய
Amir & Pavani: திருமணத்துக்கு முன்பே போட்டோ ஷூட்டில் ரொமான்ஸை கொட்டி தீர்க்கும் அமீர் - பாவனி ஜோடி!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான அமீர் மற்றும் பாவனி வரும் 20ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். தற்போது இவர்களின் போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

அமீர் மற்றும் பாவனியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
1/8

கௌரவம் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனி ரெட்டி. இந்தப் படத்திற்கு பிறகு வஜ்ரம், 465, மொட்ட சிவா கெட்ட சிவா, ஜூலை காற்றில், துணிவு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
2/8

சின்னத்திரையிலும் பாவனி ரெட்டி பல சீரியல்களில் நடித்துள்ளார். ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னதம்பி, வில்லா டூ வில்லேஜ், ராசாத்தி, பிக்பாஸ் தமிழ் சீசன் 5 என்று பல சீரியல்களில் நடித்துள்ளார்.
3/8

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் பாவனி ரெட்டி கலந்து கொண்ட போது தான் நடன இயக்குநர் அமீர் அவருக்கு அறிமுகமானார்.
4/8

அமீருக்கு பார்த்துமே பாவனி ரெட்டி மீது காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் அமீர் காதலை பாவனி ஏற்க மறுத்தாலும், பின்னர் ஏற்றுக்கொண்டார். இருவரும் லிவிங் டூகெதரில் 3 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது திருமணத்தில் ஒன்று சேர முடிவு செய்துள்ளனர்.
5/8

வரும் 20 ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெறும் நிலையில் அதற்கு முன்னதாக திருமண போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
6/8

இருவரும் கருப்பு நிற உடையில் மிகவும் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
7/8

மேலும் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை கூட மிகவும் வித்தியாசமாகவே அறிவித்தனர்.
8/8

சென்னையில் நடைபெற உள்ள இவர்களின் திருமணத்தில், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 15 Apr 2025 10:46 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement