நாடே வெட்கப்பட வேண்டும்..மொத்தமா கொல்லப் போறாங்க...கதறி அழுத நடிகை சதா..வைரல் வீடியோ
தலைநகர் டெல்லியில் உள்ள நாய்களை பிடித்து அவற்றை காப்பகங்களில் அடைக்கும் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவை கண்டித்து நடிகை சதா வெளியிட்டு வீடியோ வைரலாகி வருகிறது

தெரு நாய்களை பிடிக்க உச்ச நீதிமன்ற உத்தரவு
டெல்லியில் 6 வயது சிறுமி தெரு நாய் கடித்து உயிரிழ்ந்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள 10 லட்சம் நாய்களையும் தனிப்படை அமைத்து பிடித்து அவற்றுக்கு கருத்தடை ஊசி செலுத்தி நாய் காப்பகங்களில் அடைக்க இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த முடிவை ஒரு தரப்பு மக்கள் ஆதரித்தாலும் நாய் பிரியர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலகர்கள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் முடிவை கண்டித்து நடிகை சதா வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
கதறி அழுத நடிகை சதா
" இறந்த அந்த சிறுமி ரேபீஸ் நோயால் பாதிக்கப்படவில்லை என்பது நிரூபனமான பின்னும் அப்பாவி நாய்களை பிடித்து கொல்லப் போகிறார்கள். இத்தனை எண்ணிக்கையிலான நாய்களுக்கு அரசால் அடைக்கலம் கொடுக்க முடியாது. இன்னும் 8 மாதங்களில் இந்த நாய்கள் எல்லாம் மொத்தமாக கொல்லப்பட போகின்றன. இந்த நாய்களுக்கு முறையாக ஊசி போட்டு அவற்றின் இன விருத்தியை கட்டுப்படுத்தாதது முழுக்க முழுக்க அரசு மற்றும் நகராட்சியின் இயலாமையே. இத்தனை வருடங்களில் முறையாக பட்ஜெட் ஒதுக்கி இது நடைமுறை படுத்தப்பட்டிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது. பல விலங்கு நல ஆர்வல அமைப்புகள் இந்த விலங்குகளை பாதுகாக்க தங்களது சொந்த பணத்தை செலவு செய்து வருகிறார்கள். அவற்றுக்கு உணவளிக்கவும் மருத்துவ சிகிச்சைக்காகவும் அவர்கள் தங்கள் பணத்தை செலவு செய்கிறார்கள். நானும் இதை செய்து வருகிறேன். எந்த அரசு உதவியும் எங்களுக்கு கிடைப்பதில்லை. அதேபோல் வளர்ப்பு நாய்களை வாங்கி வளர்ப்பவர்கள் இந்த அப்பாவி நாய்கள் கொல்லப்படுவதில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது. ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு வளர்ப்பு நாயை வாங்குபோதும் தெருவில் இருக்கும் ஒரு நாய் அல்லது பூனையின் வாழ்வதற்கான உரிமை பறிபோகிறது. உங்கள் வீட்டில் பார்ப்பதற்கு அழகான ஒரு நாய் இருக்க வேண்டும் என்கிற பேராசையால் இந்த நாய்கள் தெருவில் கிடக்கின்றன. உங்களை நீங்களே விலங்கு பிரியர்கள் என்று சொல்லாதீர்கள்.
View this post on Instagram
இனி உத்தரவு வெளியானப் பின் இனி இதை எப்படி தடுக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை. இது என் மனதை கலங்கடித்துவிட்டது. இந்தியா மாதிரியான ஒரு நாட்டில் இப்படி ஒட்டுமொத்தமாக நாய்கள் கொல்லப்பட இருக்கின்றன. எனக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை. எங்கு போராட்டம் செய்யவென்று தெரியவில்லை. இந்த நாட்டின் மீது வெட்கப்பட வேண்டும், இப்படியான ஒரு உத்தரவை பிறப்பித்தவர்கள் வெட்கப்பட வேண்டும் . நீங்கள் விலங்கு நல ஆர்வலகர்களுடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும் . " என நடிகை சதா கதறி அழுதபடி இந்த வீடியோவில் பேசியுள்ளார்




















