மேலும் அறிய
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையிடம் அட்ஜஸ்ட்மெண்டுக்கு 6 மாசம் டீல் பேசிய காஸ்டிங் கோச் இயக்குனர்!
இப்படி கூட நடக்குமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையிடம் அட்ஜஸ்ட்மெண்டுக்கு 6 மாசம் டீல் பேசிய காஸ்டிங் கோச் இயக்குனர்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் அப்டேட்
1/7

6 மாசம் தொடர்பில் இருந்தால் போதும், நீங்கள் எங்கேயோ போயிடலாம் என அட்ஜெஸ்ட்மெண்டுக்கு வெளிப்படையாகவே காஸ்டிங் கோச் இயக்குனர் பேசியதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா தெரிவித்துள்ளார்.
2/7

சினிமா துறையில் நாளுக்கு நாள் அட்ஜெட்ஸ்மெண்ட் விஷயம் தலை தூக்க தொடங்கியிருக்கிறது. பிரபலங்கள் பலரும் அதைப் பற்றி வெளிப்படையாக பேசி வருகின்றனர். சினிமாவில் மட்டுமின்றி சீரீயல்களிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் தலைதூக்க தொடங்கியிருக்கிறது.
3/7

இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்று பலரும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ள அழைக்கிறார்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் லாவண்யாவும் தன் பங்கிற்கு அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
4/7

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1. இந்த தொடரில் பாண்டியனின் 2-ஆவது தம்பி கதிர் கதாபாத்திரத்திற்கு முதலில் ஜோடியாக, அதாவது முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சித்ரா. இவரின் மரணத்திற்கு பின்னர் காவியா அறிவுமணி கமிட் ஆன நிலையில், அவரும் வெளியேறியதால்... லாவண்யா முல்லை வேடத்தில் நடித்தார்.
5/7

இவர் தான் இப்போது அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். விஜே சித்ராவின் மறைவிற்கு பிறகு அவரது கதாபாத்திரத்தில் முல்லையாக நடிகை விஜே லாவண்யா நடித்திருந்தார்.
6/7

இவர், முதலில் சினிமாவில் நடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது தான் காஸ்டிங் இயக்குநர் ஒருவர் லாவண்யாவை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய அழைத்துள்ளார்.
7/7

அதோடு 6 மாதம் வரையில் இருந்தால் போதும் சினிமாவில் அடுத்தடுத்து இடத்திற்கு கூட்டி செல்வதாக டீல் பேசினாராம். மேலும், கார், பங்களா என்று சொகுசு வாழ்க்கை வாழலாம் என கூறி சில சீரியல் நடிகைகள் பெயரையும் கூறியுள்ளார். ஆனால் லாவண்யா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் லாவண்யா. அதன் பிறகு அந்த விஷயத்தைப் பற்றி அவர் வேறெங்கும் பேசவில்லையாம். கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 05 Apr 2025 10:15 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















