மளிகைக் கடைகாரருக்கு போன் செய்த விராட் கோலி.. போலீசை அழைத்த ஆர்சிபி அணி கேப்டன்!
சமீபத்தில் புதிய சிம்கார்டு வாங்கியவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் இருந்து போன் கால் வந்ததை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார்.

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தைச் சேர்ந்த மளிகை கடைக்காரரான மனிஷ் மற்றும் அவரது நண்பர் கேம்ராஜ், உள்ளூர் கடை ஒன்றில் புதிய சிம் கார்டு ஒன்றை வாங்கியுள்ளனர். வாங்கிய புதிய எண்ணிற்கு தங்களது மொபைலில் வாட்ஸ்அப்பை ஆக்டிவேட் செய்தபோது அதில் கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் புகைப்படம் வந்துள்ளது. ஆரம்பத்தில் இதைப் பார்த்து பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பின்னர், அந்த வாட்ஸ் அப் எண்ணால் பெரிய ஆச்சர்யமே நிகழ்ந்திருக்கிறது. ரஜப் படிதார் என நினைத்து விராட் கோலியும், ஏபி டிவில்லியர்ஸூம் அழைப்பு விடுத்து ரஜப் படிதார் இருக்கிறாரா என கேட்டதும் மனிஷ் ஷாக் ஆகியுள்ளார்.
அதற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டன் ரஜத் படிதார் மனிஷிடம் இது என்னுடைய பழைய போன் நம்பர் எனக்கு கொடு எனக் கேட்டுள்ளார். யாரே பிரான்க் செய்கிறார்கள் என நினைத்து காெண்டு நான் தோனி பேசுகிறேன் எனக் கூறி மனிஷூம் அவரது நண்பரும் கலாய்த்துள்ளனர். பின்னர், கிரிக்கெட்டில் இருக்கும் நண்பர்களுக்கு இந்த நம்பர் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் தயவு செய்து கொடுங்கள் என ரஜப் படிதார் கேட்டுள்ளார். அவர்கள் கேட்கவில்லை பிறகு நான் போலீசை அனுப்புகிறேன் எனக் கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
அழைப்பை துண்டித்த 10 நிமிடங்களிலேயே மனிஷூன் வீட்டின் கதவை போலீஸ் தட்டியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு தான் அவர்களுக்கு உண்மை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மனீஷ் அந்த தொலைபேசி எண்ணை காவல்துறையிடம் ஒப்படைத்தார். அப்போது மனிஷின் நண்பர் கேம்ராஜ் கூறியதாவது, தவறான தொலைபேசி நம்பரால் என் வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளது. விராட் கோலியுடன் நான் உரையாடியுள்ளேன். அவரது குரலை கேட்டதில் மிகப்பெரிய மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.





















