மேலும் அறிய
கமிட் ஆன 3 படத்திலும் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்... அம்மாவிடம் ஸ்ட்ரைட்டா கேட்டாங்க! ஷாக் கொடுத்த சீரியல் நடிகை!
ஹீரோவுடன் நடிப்பதற்கு என்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொன்னார்கள் என்று சீரியல் நடிகை வெளிப்படையாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
விஜய் டிவி சீரியல் நடிகை பட வாய்ப்புக்காக தன்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசியதாக கூறியுள்ளார்
1/7

சினிமாவிலும் சரி, சீரியலிலும் சரி நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து பல நடிகைகள் இப்போது வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது சீரியல் நடிகை சம்யுக்தாவும் இணைந்துள்ளார்.
2/7

அதில், தனக்கு சினிமா வாய்ப்பு வந்தது. அதில் நடிக்க வேண்டுமானால், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொன்னார்கள் என்று கூறியுள்ளார். சம்யுக்தா விஜய் டிவியில் ஒளிபரப்பான 'முத்தழகு' என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர்.
3/7

சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், திருமணமாகி ஒரே மாதத்தில் அவரிடம் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். மேலும் சமூக வலைத்தளத்தில், இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
4/7

அதே போல் பேட்டிகள் மூலமாகவும், இன்ஸ்டாகிராம் லைவிலும் பல அந்தரங்க விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தினர். தற்போது இருவரும் பிரிய முடிவெடுத்துவிட்ட நிலையில், தங்களது பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
5/7

இந்த நிலையில் தான் சம்யுக்தா அளித்த பேட்டி ஒன்றில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியுள்ளார். அதில் தான் சீரியல்களில் நடிக்கும் போது தன்னிடம் யாரும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி கேட்டது கிடையாது. ஆனால், பட வாய்ப்பு வந்த போது அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி கேட்டார்கள்.
6/7

எனக்கு 3 படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதில், 2 படங்களில் வெளிப்படையாகவே அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்றார்கள். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
7/7

இதே போன்று ஒருமுறை படக்குழுவில் இருந்து ஒருவர் எனக்கு போன் செய்தார்கள். என்னுடைய அம்மா தான் போனை எடுத்தார். அவரிடம் சம்பளம் போன்ற பல விஷயங்களை முதலில் பேசினார்கள். கடைசியில் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஸ்ட்ரைட்டா என்னுடைய அம்மாவிடம் பேசினார்கள். முதலில் அவங்களுக்கு புரியவில்லை என்றாலும், பின்னர் விஷயத்தை புரிந்து கொண்டு கோவமாக திட்டி... அப்படி ஒரு வாய்ப்பு என் மகளுக்கு வேண்டாம் என கூறி போனை கட் செய்துவிட்டார் என கூறியுள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published at : 09 Apr 2025 09:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















