ஆவணி மாத ராசி பலன் - சிம்மம் முதல் விருச்சிகம்
ஆவணி மாதம் 1 To 15 ராசி பலன் :சிம்ம ராசி முதல் விருச்சிக ராசி வரை :
ஆவணி மாதம் 1 To 15 ராசி பலன் :
சிம்ம ராசி முதல் விருச்சிக ராசி வரை :
சிம்ம ராசி:
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே ராசியிலேயே சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்... உங்களை வேண்டாம் என்று ஒதுக்கியவர்கள் கூட வாருங்கள் என்று அழைக்கப் போகிறார்கள்... எப்பொழுதும் தைரியமாக பேசக்கூடிய நீங்கள் லக்கனத்தில் கேது வந்ததிலிருந்து சில விஷயங்களில் ஒதுங்கி இருக்கிறீர்கள் ஆவணி ஒன்று முதல் சில காரியங்களை நீங்களாக முன் நின்று செய்வீர்கள்... உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் போகிறது.... நீங்கள் இதற்கு முன்பாக செய்த காரியங்களில் உங்களைக் குறித்து நண்பர்கள் உயர்வாக பேசுவார்கள்... பல விழாக்களுக்கு தலைமை ஏற்க கூட போகலாம்... தைரியமான சில முடிவுகளை எடுப்பீர்கள்.... உடல்நிலை சீராகும்... சிலருக்கு நண்பர்கள் பகைவர்கள் ஆகலாம்... பண வரவு தாராளமாக இருக்கும்.. உங்களுடைய அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு...
கன்னி ராசி :
எனக்கு அன்பான கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 12 சூரியன் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் இடம் விட்டு இடம் போக வைப்பார்... அடுத்தவர்கள் குறித்தான ஒரு கவலை எப்பொழுதும் உங்களுக்கு உண்டு உங்களிடம் இருப்பதை வைத்து அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள்.. இல்லாதவர்களுக்கு கொடுக்கும் காலகட்டம்... உறக்கம் இல்லாமல் சிலர் அலைந்து கொண்டிருக்கலாம் அவர்களுக்கு இது நல்ல ஓய்வெடுக்கக்கூடிய நேரம்.... செலவுகள் கட்டுக்குள் கொண்டு வரக்கூடும்.. எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்... கடன்கள் அடைய வாய்ப்பு உண்டு... உங்களுடைய அதிர்ஷ்டமான நிறம் பச்சை...
துலாம் ராசி:
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே சூரியன் பதினொன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வது உங்களுக்கு பல மேன்மையான அதிர்ஷ்டங்களை கொண்டு வரும் பாதகாதிபதி வீடு என்றாலும் கூட சூரியனின் ஒளி நீங்கள் 10 ரூபாய்க்கு வியாபாரம் செய்யும் இடத்தில் 100 ரூபாயாக வரவு வர வைப்பார்.... அதற்காக நீங்கள் அதிகமாக செலவிட நேரலாம் இருப்பினும் உங்களுக்கானது உங்களிடம் வந்து சேரும் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வீர்கள் கோவில்களுக்கு சென்று வர வாய்ப்பு உண்டு... எதிர்காலம் குறித்தான பயம் இருந்தாலும் கூட வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டு தைரியமும் உண்டு.... மனம் ஒரு நிலையாக இல்லாமல் சற்று மாறிக்கொண்டே இருக்கலாம் நவகிரக வழிபாடை மேற்கொள்ளுங்கள் உறுதியான மன தைரியத்தை இறைவன் அருளுவான்.... உங்களுடைய அதிர்ஷ்டமான நிறம் வெளிர் மஞ்சள்....
விருச்சக ராசி :
அன்பார்ந்த விருச்சிக ராசி அன்பர்களே உங்களுடைய ராசிக்கு பத்தாம் இடத்தில் சூரியன் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார் ஏற்கனவே பத்தாம் இடத்தில் கேது பகவான் இருந்து வேலையில் சற்று மந்த நிலையையும் உங்களுக்கு பிடிக்காத சில அசாத்திய சூழ்நிலைகளையும் உருவாக்கி இருக்கலாம் ஆனாலும் கூட ஆன்மீகத்தின் பிரம்மாண்ட சக்தி உங்களை எப்போதும் காப்பாற்ற தயாராக உள்ளது... எட்டாம் இடத்தில் இருக்கும் குரு மறைந்து கொண்டே உங்களுக்கு அருள் புரிவார் வேலையில் முன்னணியில் இருந்து செய்தவர்கள் தற்பொழுது ஒரு மூலையில் இருந்து செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்... அதற்காக உங்களால் வேலையை செய்ய முடியாது என்று இல்லை,.. வேறு இடத்திற்கோ வேறு ஒரு தளத்திற்கோ வேலை ரீதியாக நீங்கள் மாற்றப்படலாம் இருப்பினும் உங்களுக்கு உண்டான புகழ் உங்களை வந்து சேரும்... செல்வம் சேரும் காலகட்டம் வேலைக்காக நீங்கள் மதிக்கப்படுவீர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்... உங்களுடைய அதிர்ஷ்டமான நிறம் நீலம்…





















