ரொம்ப கடன் இருக்கா..? எளிய பரிகாரம்!!!
பைரவர் யார்..? சிவனுடைய மற்றொரு அம்சமானவர்… பைரவர் முக்காலத்தையும் உணர்ந்தவர் நாயை தன் வாகனமாக வைத்திருப்பவர்.. எட்டு திக்கில் இருந்தும் நம்மை காப்பதற்காக அஷ்ட பைரவராக உருவெடுத்திருக்கிறார்…

ரொம்ப கடன் இருக்கா..? எளிய பரிகாரம்!!
அன்பார்ந்த வாசகர்களே கடன் என்பது ஏழை எளிய மக்களுக்கு மட்டுமல்ல பெரும் பணக்காரர்களுக்கும் ஒரு மிகப்பெரிய சுமை தான்… வீட்டு விசேஷங்களுக்கு ஆரம்பித்து… நோய், பொருட்கள் வாங்குதல், படிப்பு செலவு, வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல், நண்பர்களுக்கு கொடுத்தல், உறவினர்களுக்காக வரும் செலவுகள்… என்று பல வகைகளில் நாம் கடன் வாங்க தான் செய்கிறோம்….
வாங்கிய கடனை அடைப்பதற்கு சிலர் மேலும் கடன்களை வாங்குகிறார்கள். மற்ற பலரோ வரும் வருமானத்தில் வைத்து கடனை அடைக்கிறார்கள்.. ஒரு சிலருக்கு என்னதான் செய்தாலும் கடன்கள் கூடிக் கொண்டே செல்லும் அடைந்த பாடு இருக்காது இப்படியான சூழ்நிலையில் பரிகாரம் ஏதேனும் இருக்கிறதா அப்படி பரிகாரம் செய்தால் கடன்கள் அடைய வாய்ப்பு இருக்கிறதா என்று வழிகளை தேடுவார்கள்…. இப்படியானவர்களுக்கு தான் பைரவரின் வழிபாடு மிகச் சிறந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக நமக்கு அமைகிறது…
பைரவர் யார்..?
சிவனுடைய மற்றொரு அம்சமானவர்… பைரவர் முக்காலத்தையும் உணர்ந்தவர் நாயை தன் வாகனமாக வைத்திருப்பவர்.. எட்டு திக்கில் இருந்தும் நம்மை காப்பதற்காக அஷ்ட பைரவராக உருவெடுத்திருக்கிறார்…. மிகப்பெரிய கடன் நோய் பிரச்சனைகளில் இருந்து எளிய வழியில் நம்மை காப்பதற்கு பைரவர் தயாராக இருக்கிறார்…. எவ்வளவு பெரிய கொடூரமான நோயாக இருந்தாலும், எவ்வளவு அதிகமான கடன்கள் நமக்கு இருந்தாலும், எதிரிகளால் சூழப்பட்டு நம்மை அவர்கள் தாக்க தயாராக இருந்தாலும் கூட ஒரு நொடிப் பொழுதில் பைரவர் நம்மை காப்பாற்றுகிறார்…
ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்..!
எட்டு பைரவர்களுள் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் கடன்களை தீர்ப்பதற்கும் வீட்டில் பண வரவை கொண்டு வருவதற்கும், செல்வம் சேருவதற்கும் மிகப்பெரும் உதவியாக, நமக்கு வழிகாட்டியாக இருக்கும் கடவுள்… வெள்ளிக்கிழமை தோறும் ஸ்வர்ண ஆகாஷ் பைரவரை விளக்கேற்றி வணங்கி வந்தால் உங்களுக்கு இருக்கும் கடல்களில் இருந்து மிகப்பெரிய விடுதலையை தருகிறார்…
கையில் நகைகளையும், பொற்காசுகளையும், பணத்தையும் வைத்திருக்கும் நம் மகாலட்சுமி எந்த அளவுக்கு நமக்கு தேவையான செல்வத்தை கொடுத்து படி அளக்கிறாரோ… அதே அளவுக்கு சொர்ண ஆக்கர்ஷண பைரவருக்கும் மிகப்பெரும் செல்வத்தை நமக்கு கொடுத்து படி அளப்பதற்கான சக்தி உண்டு…
கடன்காரர்களின் தொல்லை தாங்க முடியவில்லை . வீட்டில் எப்பொழுதும் அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது செல்வம் சேரவில்லை யார் யாரோ வந்து வீட்டு கதவை தட்டி பணம் கேட்கிறார்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை என அனைத்து கதவுகளும் மூடப்பட்ட நிலையில் இருக்கும் உங்களுக்கு சொர்ண ஆக்கர்ஷண பைரவரின் வழிபாடு மிகப்பெரும் முன்னேற்றத்தையும் மூடி இருக்கும் பாதையை திறப்பதற்கான வழியையும் காட்டுவார்….
வெள்ளிக்கிழமையில் உங்கள் வீட்டின் அருகாமையில் இருக்கக்கூடிய பைரவர் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நிச்சயமாக உங்களுக்கான கடன்கள் அடையும்… இவை அனைத்தும் ஒரே நாளில் நடந்து விடும் என்று எதிர்பார்க்கக் கூடாது முதல் முதலில் பைரவரிடம் போகும் பொழுது பயபக்தியுடன் மனதார அவரை வேண்டி எனக்கு இருக்கும் கடன்களை அடைத்துக் கொண்டு பைரவா என்று வாய் நிறைய சொல்லி உங்களுக்கான கோரிக்கைகளை எடுத்து வைப்பதன் மூலம் உங்களுடைய கடன் சுமைகளை அவர் ஏற்றுக்கொள்வார்…
பைரவருக்கு ராகு காலம் என்றாலும் கூட மிகவும் பிடிக்கும் மற்றவர்களுக்கு எது ஆகாதோ அதையே பைரவர் சவாலாக நின்று உங்களுக்கான வெற்றிப் பாதையை திறப்பதற்கான வழியை காட்டுவார்… ஸ்வர்ண ஆகாஷ்ன பைரவரை வழிபடுங்கள் கடன்களில் இருந்து விடுபடுங்கள்….





















