மேலும் அறிய
அச்சச்சோ.. விஜய் டிவி சீரியல் ஹீரோயின் ஸ்வேதாவுக்கு என்ன ஆச்சு? வைரலாகும் போட்டோஸ்!
விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்வேதா, தீக்காய மேக்கப்புடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், டக்குனு பார்க்கும் ரசிகர்களை பக்குனு ஆக்கியுள்ளது.

சின்னமருகள் சீரியல் நடிகையின் புகைப்படம்
1/5

விஜய் டிவி தொலைக்காட்சியில், கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட சீரியல் 'சின்ன மருமகள்'. மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த தொடருக்கு, தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
2/5

இந்த சீரியலை எம் மனோஜ் குமார் இயக்க, நவீன் குமார் ஹீரோவாகவும், ஸ்வேதா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஏஓகே சுந்தர், அருள் ராஜன், வசந்தி, கௌரி, பானுமதி, தாமரைச்செல்வி, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
3/5

கிராமத்து களத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின், கதாநாயகி ஸ்வேதா திருமணத்திற்கு பின்னர் படிக்க ஆசைப்படும் நிலையில் சில காரணங்களால் அதனை அவருடைய மாமனார் வீட்டில் ஏற்க மறுக்கின்றனர். தடைகளை தாண்டி ஸ்வேதா தன்னுடைய டாக்டர் கனவை அடைகிறாரா? தன்னை சுற்றி நடக்கும் சதி திட்டங்களை முடியடிப்பாரா? என எதிர்பாராத திருப்புமுனைகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த தொடர்.
4/5

டாப் 10 டிஆர்பி பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்த சீரியலின் கதாநாயகி ஸ்வேதா, தீக்காயங்கள் பட்ட மேக்கப் போட்டபடி வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் பார்ப்பவர்கள் மனதை பதற வைத்துள்ளது.
5/5

ஒரு சில ரசிகர்கள் இது மேக்கப் என தெரியாமல், உங்களுக்கு என்ன ஆச்சு? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் முழு வீடியோ பார்த்த பின்னர் தான் அவர்களுக்கு உண்மை என்னனே புரிஞ்சிது போல.
Published at : 20 Nov 2024 10:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion