மேலும் அறிய

RTE: கல்வி உரிமைச் சட்டத்தை மதிக்க மறுக்கும் அதிகாரி: எழும் கண்டனம்! ஏழைக் குழந்தைகள் எதிர்காலம் என்ன ஆகும்?

நடப்பாண்டில் இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ரூ.600 கோடி இன்று வரை செலுத்தப்படவில்லை.

கல்வி உரிமைச் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் ஏழைக் குழந்தைகளை அவமதித்த கல்வித்துறை உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசு இன்னும் செலுத்தாததால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தக் குழந்தைகளையும், அவர்களின் பெற்றோரையும் இழிவுபடுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் உயரதிகாரி ஒருவர் பேசியதாக நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களையும், பெற்றோரையும் இழிவுபடுத்தும் வகையில் கல்வி அதிகாரி பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

2009ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, தனியாருக்கு சொந்தமான பள்ளிகளிலும் மழலையர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளிலும் 25% இடங்கள் சமூக நிலையிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய குழந்தைகளுக்கு  ஒதுக்கப்படுகின்றன.

பெற்றோரே கட்டணத்தைச் செலுத்த வேண்டும்

அச்சட்டத்தின்படி நடப்பாண்டில் இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ரூ.600 கோடி இன்று வரை செலுத்தப்படவில்லை. அரசுத் தரப்பில் கல்விக் கட்டணம் செலுத்தப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோரே அந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்த சிக்கல் தொடர்பாகவும்,  அதனால் பெற்றோர்களிடையே ஏற்பட்டிருக்கும் குமுறல் தொடர்பாகவும் பள்ளிக்கல்வித் துறையில்  அமைச்சருக்கு அடுத்த நிலையில் உள்ள உயர் அதிகாரியிடம் செய்தியாளர் கேட்ட போது.‘‘25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் நாங்களா சேரச் சொன்னோம்? அரசுப் பள்ளிகளில் எவ்வளவோ காலியிடங்கள் இருக்கின்றன. இப்போதும் கூட சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர் 25 சதவீத இட ஒதுக்கீட்டில்  சேர்ந்த இடத்தை ரத்து செய்து விட்டு, அரசு பள்ளிகளில் சேர்க்கச்  சொல்லுங்கள். மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை நாங்கள் செய்து கொடுக்கிறோம்” என்று அலட்சியமாக பதில் கூறியதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இவ்வாறு அதிகாரத்  திமிருடன் பதில் கூறிய பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரி யார்? என்பதை சம்பந்தபட்ட நாளிதழ் வெளியிடவில்லை. அந்த அதிகாரி யாராக இருந்தாலும்  அவரது இந்தத் திமிரான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. குழந்தைகளையும், பெற்றோரையும் இழிவுபடுத்தும் அவர், பள்ளிக் கல்வித்துறையின் உயர் பதவியில் ஒரு நிமிடம் கூட நீடிப்பதற்கு  தகுதியற்றவர் என்பதைத்தான் இந்த பதில் காட்டுகிறது.


சமூகநீதியை சிதைக்கும் செயல்


அடித்தட்டு மக்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் கல்வி பெறும் உரிமைச் சட்டம்  2009-ஆம் ஆண்டில்  மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை 2006-11 ஆம் ஆண்டு காலத்தில் கலைஞர் தலைமையிலான அரசுதான் தமிழகத்தில் செயல்படுத்தியது. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் 25% மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசுதான் வெளியிடும். அதன் பொருள் விருப்பமுள்ள மாணவர்கள் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் சேரலாம் என்பதுதான். அவ்வாறு இருக்கும்போது தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் சேரும்படி ஏழை மாணவர்களிடம் நாங்களா சொன்னோம்? என்று கல்வித்துறை உயரதிகாரி கேட்பது அரசின் கொள்கைகளுக்கு எதிரானது என்பது மட்டுமின்றி, சமூகநீதியை சிதைக்கும் செயலும் ஆகும்.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டிற்கும், நடப்பாண்டின் முதல் காலாண்டிற்கும் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்பது உண்மைதான். இரு அரசுகளுக்கும் இடையே நிலவும் கொள்கை அடிப்படையிலான மோதல்கள்தான் இதற்குக் காரணம் ஆகும். இந்த சிக்கல் உடனடியாகத் தீர வாய்ப்பில்லை எனும் நிலையில், மாற்று ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தமிழக அரசு அதன் சொந்த நிதியிலிருந்து செலுத்தி விட்டு, மத்திய அரசிடமிருந்து வரும் போது எடுத்துக் கொள்ளலாம். அதையெல்லாம் செய்யாமல் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கையையே நடத்தாமல் இருப்பதும், மற்ற வகுப்புகளில் பயிலும் 8 லட்சம் பேரின் கல்வி பாதிக்கப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் ஏற்க முடியாது; மன்னிக்கவும் முடியாது.

யாருடைய அப்பன் வீட்டுச் சொத்தும் அல்ல

இவை அனைத்திற்கும் மேலாக மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் ஓர் உயரதிகாரி, இப்படி பொறுப்பற்ற வகையில் பேசுவதை அரசு சகித்துக் கொண்டிருக்க முடியாது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் பயிலும் மாணவர்களுக்காக செலுத்தப்படும் கட்டணம் யாருடைய அப்பன் வீட்டுச் சொத்தும் அல்ல. அது மக்களின் வரிப்பணம். ஏழைக் குழந்தைகளுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியது அரசின் கடமை. அதை செய்யாமல் ஏழைக் குழந்தைகளை இழிவுபடுத்தக்கூடாது.

சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரான பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரியின் இந்த நிலைப்பாட்டை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறதா? என்பதை ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஏழைக் குழந்தைகளை இழிவுபடுத்தும் பள்ளிக்கல்வித்துறையின் உயரதிகாரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
செண்டாக் கலந்தாய்வு எப்போது? 12,885 மாணவர்கள் தவிப்பு: தனியார் கல்லூரிகளில் தஞ்சம் புகும் அவலம்!
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget