90ஸ் கிட்ஸ் பாவங்கள்! திருமண ஏக்கத்தில் இளைஞர்கள்.. 6 பேருக்கு அல்வா கொடுத்த இளம்பெண்!
ஆண்களை குறிவைத்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவர்களிடம் பணம், நகைகளை பறித்த உத்தரப் பிரதேச கும்பலை காவல்துறை பிடித்தள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சிங்கிள்ஸ்-ஆக இருக்கும் ஆண்களை குறிவைத்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவர்களிடம் பணம், நகைகளை பறித்த கும்பலை காவல்துறை பிடித்தள்ளது. இதுதொடர்பாக இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூனம் என்பவர் மணமகளாகவும், சஞ்சனா குப்தா என்பவர் அவரது தாயாகவும் நடித்து, அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி வந்துள்ளனர். விமலேஷ் வர்மா மற்றும் தர்மேந்திர பிரஜாபதி ஆகிய இருவர், இளைஞர்களை அடையாளம் கண்டு பூனத்திற்கு அறிமுகப்படுத்துவார்கள்.
இளைஞர்களை ஏமாற்றும் கும்பல்:
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளைஞர்களிடம் இந்த கும்பல் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. எளிமையான பதிவு திருமணம் நடைபெறும். அதன் பிறகு, பூனம் மணமகன் வீட்டிற்குச் செல்வார். சந்தர்ப்பம் கிடைத்த உடனே, அவரது வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு பூனம் தப்பிச் சென்று விடுவார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "மற்ற இளைஞர்களை ஏமாற்றுவது போல் புகார்தாரரான சங்கர் உபாத்யாயாவையும் இந்த கும்பல் குறிவைத்துள்ளது. இதற்கு முன்பு, அவர்கள் இதுபோன்று ஆறு பேரை ஏமாற்றியுள்ளனர்.
திருமணமாகாத சங்கர் உபாத்யாயா, திருமணத்திற்கு பெண் தேடி வந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில்தான், சங்கரை சந்தித்து திருமணம் செய்து வைப்பதாக விமலேஷ் கூறியுள்ளார். ஆனால், அவர் ரூ. 1.5 லட்சம் செலவழிக்க வேண்டும் என்றும் கூறினார். இதற்கு, சங்கரும் ஒப்புக்கொண்டுள்ளார்.
6 பேருக்கு அல்வா கொடுத்த இளம்பெண்:
சங்கரை வரவழைத்து பூனத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளார் விமலேஷ். அப்போது, அவரிடம் ரூ.1.5 லட்சம் கேட்டுள்ளனர். ஏதோ, தவறு நடப்பதாக சங்கருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால், பூனம் மற்றும் சஞ்சனாவின் ஆதார் அட்டைகளை அவர் கேட்டார்.
அவர்கள் என்னை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்று அவர்களின் செயல்களில் இருந்து நான் சந்தேகப்பட்டேன். எனவே, நான் திருமணம் செய்ய மறுத்தேன். ஆனால், என்னை கொலை செய்துவிட்டு, பொய் வழக்குகளில் சிக்க வைப்பதாக அவர்கள் மிரட்டினார்கள். யோசிக்க நேரம் வேண்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். நாங்கள் உடனடியாக எங்கள் குழுக்களை எச்சரித்து இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை கைது செய்தோம்" என்றார்.
இதையும் படிக்க: Biryani Market: ஆத்தாடி..! ஆண்டுக்கு ரூ.10,000 கோடி, பிரியாணியை ரவுண்டு கட்டும் தமிழர்கள் - சென்னையில் மட்டும் இவ்வளவா?