Mahindra Car Offer: எல்லா அம்சங்களும் கொட்டிக் கிடக்கே.! இந்த மஹிந்திரா காருக்கு ரூ.2.5 லட்சம் சலுகை, 5 ஸ்டார் ரேட்டிங்
Mahindra XUV400 EV Offer: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா நிறுவனம் தனது குறிப்பிட்ட மின்சர கார் மாடலுக்கு ரூ.2.5 லட்சம் சலுகை அறிவித்துள்ளது.

Mahindra XUV400 EV Offer: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் குறிப்பிட்ட மின்சார கார் மாடலுக்கான ரூ.2.5 லட்சம் சலுகை ஜுலை மாதத்திற்கு மட்டுமே பொருந்தும்.
மஹிந்திரா அறிவித்த அதிரடி சலுகை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒட்டுமொத்தமாக இல்லாவிட்டாலும், எஸ்யுவி பிரிவில் மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து விற்பனையில் அசத்தி வருகிறது. இதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள பெரும்பாலான கார் மாடல்கள் பயனர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், ஒரு கார் நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் தான் அதன் விற்பனையை ஊக்கப்படுத்தும் விதமாக பெரும் சலுகையை மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையானது XUV400 கார் மாடலுக்கு தான் வழங்கப்பட்டுள்ளது.
XUV400 கார் மாடலுக்கு ரூ.2.5 லட்சம் தள்ளுபடி:
இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனம் தரப்பிலிருந்து மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார காராக XUV400 உள்ளது. இந்நிலையில், ஜுலை மாதம் முடியும் வரையில் அந்த காரின் விலையில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த காரின் EL Pro வேரியண்டிற்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 5 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலையானது, சென்னையில் 15 லட்சத்து 49 ஆயிரம் முதல் 17 லட்சத்து 69 ஆயிரம் வரை (ஆன் - ரோட்) நீள்கிறது.
XUV400 - பேட்டரி விவரங்கள்
XUV400 கார் மாடல் விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஓட்டுவதற்கு அனைத்து அம்சங்களும் நிறைந்த எஸ்யுவி என்ற நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதற்கேற்றபடி, 34.5KWh மற்றும் 39.4KWh என்ற இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெற்றுள்ளது. சிறிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒற்றை மோட்டாருடன் சேர்ந்து 148bhp ஆற்றலை உற்பத்தி செய்து, 375 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என மஹிந்திரா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பெரிய பேட்டரி பேக் ஆனது 148bhp மற்றும் 310Nm ஆற்றலை உற்பத்தி செய்து, 456 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
XUV400 - தொழில்நுட்ப அம்சங்கள்
முற்றிலும் மின்சார வாகனமான XUV400 செயல்திறன், அம்சங்களின் கலவையாக உள்ளது. அதன்படி, 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் , 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் என இரண்டு டிஸ்பிளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ & ஆப்பிள் கார் பிளே, வயர்லெஸ் சார்ஜர், கனெக்டர் கார் ஃபியூட்சர்ஸ் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மின்சார சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்ஸ், ரியர் யுஎஸ்பி போர்ட் மற்றும் டூயல் டோன் இண்டீரியர் ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன.
XUV400 - பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 6 எர் பேக்குகள், EBD உடன் கூடிய ABS, ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், ESP, அடாப்டிவ் கெய்ட்லைனுடன் கூடிய ரிவர்ஸ் கேமரா, 3 பாயிண்ட் சீட்பெல்ட் மற்றும் ஐசோஃபிக்ஸ் மவுண்ட்ஸ் ஆகிய அம்சங்களும் உள்ளன. இதன் வாயிலாக பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்று அசத்தியுள்ளது. உள்நாட்டு சந்தையில் டாடா நெக்ஸான், MG ZS EV மற்றும் ஹுண்டாய் கோனா எலெக்ட்ரிக் ஆகிய கார் மாடல்களிடமிருந்து XUV400 போட்டியை எதிர்கொள்கிறது.





















