இளையராஜாவுக்கு மருமகளாக வேண்டியவள்...இளையராஜா போட்ட வழக்கு.. கண் கலங்கிய வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார் இயக்கிய மிஸஸ் & மிஸ்டர் படத்தின் மீது இளையராஜா வழக்குத் தொடர்ந்து குறித்து வனிதா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்

வனிதா விஜயகுமார் இயக்கியுள்ள மிஸஸ் & மிஸ்டர்
நடிகை வனிதா விஜய்குமார் தற்போது மிஸஸ் & மிஸ்டர் என்கிற படத்தை இயக்கியுள்ளார். தானே இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்து நடித்தும் இருக்கிறார். இப்படத்தில் இளையராஜா இசையமைத்த 'சிவராத்திரி' படம் ரிமிக்ஸ் செய்து பயண்படுத்தப் பட்டிருந்தது. அனுமதியின்றி தனது பாடலை பயன்படுத்தியதாக கூறி இளையராஜா மிஸஸ் & மிஸ்டர் படத்தின் மீது இன்று சென்னை ஹை கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வரும் ஜூலை 14 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. மிஸஸ் & மிஸ்டர் திரைப்படம் இன்று ஜூலை 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது. இளையராஜா வழக்கு தொடர்ந்தது குறித்து வனிதா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
கண் கலங்கிய வனிதா
பத்திரிகையாளர்களின் பேசிய வனிதா " இளையராஜா என்பவர் இசையின் கடவுள். கடவுள் நம்மகிட்ட கோவிச்சுகிட்டா எப்டி இருக்குமோ அப்டி . நான் சின்ன வயசுல இந்து அந்த வீட்ல வளர்ந்திருக்கேன். இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்பே அவரை நேரில் சந்தித்து பாட்டை பயண்படுத்தியிருக்கோம்னு சொல்லிட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டுதான் வந்தோம். அப்போ சரி என்று சொன்னார். அப்படி அவர் கேஸ் போடனும்னா சோனி நிறுவனத்தின் மேலதான் போடனும். தன்னிடம் வந்து மரியாதை கொடுத்து அனுமதி கேட்டால் பணமே இல்லாமல் கொடுத்துவிடுவேன் என ராஜாப்பா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதனால்தான் நான் அவரிடம் போய் கேட்டேன். சில விஷயங்களை வெளியே சொல்ல முடியாது. சொன்னால் தப்பாகிடும் ஆனால் அந்த வீட்டில் ஜீவா அம்மா கையில் இருந்து சாவியை வாங்கி அலமாரியை திறந்து நகையை எடுத்து கடவுள் முன்னாடி பூஜ பண்ணிருக்கேன். அந்த வீட்டிற்காக அவ்வளவு உழைச்சிருக்கேன். நான் அந்த வீட்டுக்கு மருமகளாக போக வேண்டியவள் அவ்வளவு தான் சொல்வேன்." என வனிதா விஜயகுமார் பேசினார்.




















