மேலும் அறிய
Maha Kumbh 2025: கும்பமேளா - கங்கை நதியில் அதிகப்படியான மனித கழிவு பாக்டீரியாக்கள் - அரசு தகவல்!
Maha Kumbh 2025: மகா கும்பமேளா நிகழ்வில் கங்கை நதியின் தண்ணீர் குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகா கும்பமேளா புகைப்பட தொகுப்பு!
1/6

மகாகும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் பாயும் கங்கை நதியில், அதிகப்படியான மனித கழிவு பாக்டீரியாக்கள் இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
2/6

ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13ம் தேதி முதல், 52 கோடிக்கும் அதிகமான மக்கள் கங்கை நதியில் புனித நீராடியுள்ளனர்.
3/6

மகா கும்பமேளாவிற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பானி மற்றும் அதானி குடும்பத்தினர் என பல விவிஐபிக்களும் திரைபிரபலங்கள் ஆகியோர் இதுவரை புனித நீராடியுள்ளனர்.
4/6

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கங்கையில் புனித நீராட பிரயாக்ராஜை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் பிரயாராஜ் கங்கையில் "அதிக அளவு மல பாக்டீரியாக்கள்" இருப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கவலை தெரிவித்துள்ளது.
5/6

பிரயாக்ராஜின் பல்வேறு இடங்களில் குளிப்பதற்கு ஏற்ற தரத்திற்கு கங்கை நீர் இணங்கவில்லை என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB), தேசியச் பசுமை தீர்ப்பாயத்தில் சமர்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்பட, மலக் கோலிஃபார்ம் என்பது கழிவுநீர் மாசுபாட்டின் குறிகாட்டியாகும். 100 மில்லிக்கு 2,500 யூனிட்கள் என்ற அனுமதிக்கப்பட்ட வரம்பைக் கொண்டுள்ளது. ஆனால், ஆற்று நீரின் தரம், பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்காணிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் மல கோலிஃபார்ம் (FC) காரணமாக, குளிப்பதற்கான தரத்துடன் நீர் ஒத்துப்போகவில்லை.
6/6

மஹாகும்பமேளாவின் போது, புனித நீராடும் நாட்கள் உட்பட, பிரயாகராஜில் உள்ள ஆற்றில் பலர் குளிப்பதால், இறுதியில் மல செறிவு அதிகரிக்கும்" என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. பிரயாக்ராஜில் உள்ள கங்கை மற்றும் யமுனை நதிகளில் கழிவுநீர் வெளியேற்றத்தைத் தடுப்பது தொடர்பான பிரச்சினையை. தேசிய பசுமை தீர்ப்பாயம் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரித்து வருகிறது.
Published at : 18 Feb 2025 04:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion