Sudhakar IPS Warning : ”அசிங்கமா இருக்கு..வேலையை விட்டு போயிடுங்க"சுதாகர் IPS WARNING
’’லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்..நல்லா இருக்காது’’ என சென்னை போக்குவரத்து கூடுதல் ஆனையர் சுதாகர் லஞ்சம் பெறுவதை கண்டித்து போக்குவரத்து காவலர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான ஆடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை வேப்பேரியில் போக்குவரத்து காவலர்கள் மஞ்சப்பையில் வைத்து பணம் பெற்ற வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட 3 காவல் அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் சுதாகர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.. இந்நிலையில் இதுபோன்ற புகார்கள் அடிக்கடி வருவதாக கூறி அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கு சென்னை போக்குவரத்து கூடுதல் ஆனையர் சுதாகர் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அப்போது பேசிய அவர், லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான், இந்த எண்ணத்துடன் இருந்தால் ட்ராஃபிக்கை விட்டே போய் விடுங்கள். ஒருத்தர்னால ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்ட பேரு.. இனி இப்படி நடந்தா நல்லா இருக்காது என போக்குவரத்து காவலர்களுக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.
இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.