மேலும் அறிய
எல்லாரும் ஏன் மதுரையை சூஸ் பண்றாங்க தெரியுமா... செல்லூர் ராஜூ சொல்லும் விளக்கம் !
தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் மக்களிடத்தில் முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரு நிலை இருந்து வரும், அதுதான் இன்றைக்கு விஜய் செய்திருக்கிறார்.

செல்லூர் ராஜூ
Source : whats app
மதுரை மண்ணில் மாநாடு வைத்தால் வெற்றி கிடைக்கும் என்று அனைவருடைய நினைப்பு, அதன் அடிப்படையில் தான் அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் மதுரையை நோக்கி இருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரையில் பேட்டி
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்..,” ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானின் முதல் படை வீட்டில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவிற்கு, உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மதுரை மக்களின் பக்த கோடிகளின் வேண்டுகோள் தான் இது.
ஈ.பி.எஸ்.,க்கு சிறப்பு அர்ச்சனை
இபிஎஸ் அவர்களுடைய பயணம் வெற்றி பெற வேண்டி சேலத்தில் ஏற்கனவே அவரை சந்தித்து எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறோம். மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தோம். அன்னை மீனாட்சி அம்மன் கோயிலில் அவருக்கான ஒரு சிறப்பு அர்ச்சனை செய்தோம். அன்றைய தினம் தான் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. மதுரையை காத்துக் கொண்டிருக்க கூடிய அன்னை மீனாட்சி அவர்களிடம் ஆசி பெற்று அவருக்கு நினைவு பரிசை வழங்கினோம்.
தேர்தலுக்கு விஜய் முன்னெடுக்கிறார்
கூட்டணி குறித்தும் ஆட்சி அமைப்பது குறித்தும் பொதுச் செயலாளர் ஏற்கனவே கூறிவிட்டார். தமிழக மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து செயல்படக் கூடியவர் தான் இபிஎஸ். அவருடைய பயணம் எழுச்சி பயணம் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளத்தில் அவர் சென்று கொண்டிருக்கிறார். அவர் சென்ற அனைத்து மாவட்டங்களிலும் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம் என்று இபிஎஸ் அவர்கள் தெரிவித்த நிலையில் நாங்கள் யாரும் கருத்து கூற விருப்பமில்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும் தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் மக்களிடத்தில் முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரு நிலை இருந்து வரும், அதுதான் இன்றைக்கு விஜய் செய்திருக்கிறார்.
எதையாவது செய்ய வேண்டும் என மூர்த்தி செயல்படுகிறார்
மதுரை மண்ணில் மாநாடு வைத்தால் வெற்றி கிடைக்கும் என்று அனைவருடைய நினைப்பு, அதன் அடிப்படையில் தான் அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் மதுரையை நோக்கி இருக்கிறது. நம்முடைய கட்சியின் நிலைப்பாட்டை மதுரை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் அனைத்து கட்சியினருடைய எண்ணம். நாங்கள் பத்து தொகுதிகளும் வெற்றி பெறுவது நிச்சயம் அதுதான் எங்களுடைய திட்டம். திமுக அமைச்சர் கூறுவது அவருடைய கருத்து, அவருடைய கட்சியினரை ஊக்கப்படுத்தும் வண்ணம் அவர் சொல்வதற்கு நான் பதில் கூற முடியாது . மதுரை மேற்கு தொகுதியை பொறுத்தவரையில், புதிதாக அவர் நியமிக்கப்பட்டிருப்பதால் பொறுப்பேற்ற காரணத்தினால், அமைச்சர் மூர்த்தி ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மீண்டும் அதிமுக தான் வெற்றி பெறும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















