மேலும் அறிய

வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாமா? சைபர் மோசடி வலையில் சிக்காதீர்! எச்சரிக்கை & தீர்வு

சைபர் கிரைம் நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் www.cybercrime.gov.in மற்றும் 1930 என்ற Toll Free எண்ணிற்கு அழைத்து உடனடியாக உங்களுடைய புகாரினை பதிவு செய்ய வேண்டும்

இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி வியக்க வைக்கும் வகையில் உள்ளது. பல்வேறு முன்னேற்றங்களுக்கு இந்த தொழில்நுட்பங்கள் பயன்படுகிறது. அதே நேரம் சில சமூக விரோதிகள் தொழில்நுட்பங்களை வைத்து பிறரிடம் பணம் பறிக்கவும் பயன்படுத்துகின்றனர். சில பங்கு வர்த்தகம், தங்க முதலீடு, பிரதமர் இலவச திட்டம் என பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இதனை நம்பி பணத்தை சிலர் இழக்கின்றனர்.

ஒரு சிலரிடம் வெளிமாநிலத்தில் இருந்து போலீசார் பேசுவது போல் பேசி 'டிஜிட்டல் அரஸ்ட்' செய்துள்ளதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர். மாவட்டத்தில் இவ்வகையான இணைய மோசடிகளில் ஏமாறும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவ்வகையான மோசடிகளில் பட்டதாரிகள் இரையாகுவது தான் சோகமானது. மோசடி செய்யும் நபர்கள் மஹாராஷ்டிரா, பீஹார், டில்லி உள்ளிட்ட மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து இச்செயல்களில் ஈடுபடுவதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.


வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாமா? சைபர் மோசடி வலையில் சிக்காதீர்! எச்சரிக்கை & தீர்வு

இது போன்ற மோசடிகளை தடுக்க திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையின் செய்திக்குறிப்பு தொடர்பாக மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் கூறியிருப்பதாவது, அனைத்து சமூக வலைதளங்கள் மூலமாக தற்போது 'review task fraud' (மதிப்பாய்வு பணி மோசடி) மோசடிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. Telegram/WhatsApp வாயிலாக அறிமுகமில்லாத எண்களிலிருந்து வீட்டில் இருந்தபடியே மொபைல் போன் மூலமாக online part time job செய்து தினமும் சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி வரும் message-களுக்கு ஆசைப்பட்டு விருப்பம் தெரிவித்துவிட்டால் சில review task-களை கொடுத்து அதை செய்து முடித்ததும் அதற்காக ஒரு review task-ற்கு சில நூறு அல்லது ஆயிரம் ரூபாய் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி நம்பிக்கை ஏற்படுத்ததுவார்கள்.


வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாமா? சைபர் மோசடி வலையில் சிக்காதீர்! எச்சரிக்கை & தீர்வு

உங்களை டெலிகிராம் அல்லது வாட்ஸப் மூலம் ஒருவர் தொடர்பு கொண்டு அவர்களது website-ல் சில task-களை செய்து முடித்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி முதலில் சில ஆயிரம் பணம் முதலீடு செய்ய வைத்து அதை விட கொஞ்சம் அதிக பணத்தை கொடுத்து நம்ப வைப்பார்கள். பின்னர் மேலும் ஆசை வார்த்தை கூறி உங்களை அதிகமான பணத்தை செலுத்த கூறி கட்டாயப்படுத்துவார்கள். அதிகமான பணத்தை முதலீடு செய்தவுடன் அதிக லாபம் கிடைத்து இருக்கிறது எனவும்; அந்த பணத்தை உடனே எடுக்க முடியாது எனக்கூறியும் இன்னும் சில task-களை செய்ய வைத்தும் மீண்டும் பணம் கட்டினால் தான் மேற்சொன்ன பணத்தை லாபத்தோடு பெற முடியம் என இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கிவிடுவார்கள்.உங்களது சொந்த நிலத்தையோ, வீட்டையோ, நகையையோ அடமானம் வைத்தோ (அ) விற்றோ பணத்தை சைபர் குற்றவாளிகளிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இது போன்ற சைபர் கிரைம் நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் www.cybercrime.gov.in மற்றும் 1930 என்ற Toll Free எண்ணிற்கு அழைத்து உடனடியாக உங்களுடைய புகாரினை பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget