மேலும் அறிய

Coolie : மோனிகா... லவ் யூ மோனிகா.. அனிருத் கை வைத்தாலே ஹிட் தான்.. கூலி இரண்டாவது சிங்கிள்

கூலி படத்தின் இரண்டாவது சிங்கிளான மோனிகா என்ற பாடல் வெளியாகி சமூகவலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.

90களில் வெளியான மெலினா படத்தின் மூலம் ஹாலிவுட்டையே கிறங்கடித்தவர் பிரபல நடிகை மோனிக்கா பெலூச்சி. அந்த பெயரில் ஒரு எனர்ஜி கிடைப்பது போலவே ரசிகர்கள் உணர்ந்துள்ளனர். இந்நிலையில், அவரது பெயரிலேயே ஒரு பாடல் இன்று வெளியாகி கோலிவுட்டையே ஆட்டம் போட வைத்திருக்கிறது. தற்போது தமிழ் ரசிகர்கள் அனைவரும் மோனிகா மோனிகா என்றே பித்து பிடித்து அலைய தொடங்கி விட்டனர். 

ரூ.1,000 கோடி வசூல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், செளபின் ஷாஹிர், அமீர்கான் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். விக்ரம் படத்தை போன்றே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் கண்டிப்பாக 1,000 கோடி கலெக்சனை அள்ளும் என்றும் படக்குழு நம்பிக்கை வைத்திருக்கிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். 

டி.ஆர். குரலில் சிக்கிட்டு பாடல்

ஏற்கனவே கூலி படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களும் வெளியிட்டு படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளனர். சமீபத்தில் டி.ஆர்.குரலில் வெளியான சிக்கிட்டு பாடலும் ரசிக்கும் படி இருந்தது. இந்த பாட்டின் லிரிக் வீடியோவில் டி.ஆர். தனது ஸ்டைலில் துள்ளலான ஆட்டம் போட்டார். அதில், அனிருத், சாண்டி ஆகியோரும் செம வைப் மோடை செட் செய்தார்கள். இந்த ஆட்டம் அடங்குவதற்குள் கூலி படத்தின் இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியாகி டிரெண்டிங் ஆகி வருகிறது. 

மோனிகா.. லவ் யூ மோனிகா

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூலி படத்தின் 2வது சிங்கிள் இன்று மாலை வெளியாகும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன் படி இன்று மாலை 6 மணிக்கு வெளியான மோனிகா பாடல் ரசிகர்களை மதி மயங்க வைத்திருக்கிறது. பின்னனி பாடகி சுபாஷினி குரலில் இருக்கும் கிறக்கமும், கடலுக்கு நடுவில் நடிகை பூஜா ஹெக்டேவின் ஆட்டமும் ரொம்ப ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது. இந்த பாடலில் நடிகை பூஜா ஹெக்டே சிகப்பு கவுனில் வந்து மோனிகாவாக கவர்ந்து இழுக்கிறார். பாடலின் வரிகளும் அனிருத்தின் இசையும் சமூகவலைதளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. மோனிகா ஐ லவ்யூ மோனிகா என்று தொடங்கும் பாடல் அடுத்த காவாலா ஹிட் வரிசையில் இடம்பெறும் என்றே ரசிகர்கள் கமெண்டில் பதிவிட்டுள்ளனர். 

பாராட்டை அள்ளும் செளபின் ஷாஹிர்

மோனிகா பெல்லூசி கடலில் வந்தாச்சு, கடலே கொந்தளிக்கும் சுனாமியே வந்தாச்சு என்று தொடங்குகிறது. பிறகு லிரிக்கின் நடுவில் நிலவை சிவப்பாக்கும் தஞ்சாவூர் காரி போன்ற வரிகளும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பாடலில் மலையாள நடிகர் செளபின் ஷாஹிர் ஆட்டமும் வரவேற்பை பெற்றிருக்கிறது. பூஜா ஹெக்டேவுக்கு இணையாக ஆட்டம் போட்டிருக்கிறார். பாடலின் கடைசி நிமிடங்களில் அவரது ஆட்டத்தை பார்த்து ரசிகர்களே ஸ்டன் ஆகி போனதாக தெரிவிக்கின்றனர். மோனிகா பாடல் மூலம் ரசிகர்கள் பூஜா ஹெக்டே மீது வைரல் பீவர் வர தொடங்கியுள்ளது. கூலி படம் ரிலீஸ் ஆகும் வரை இந்த பீவர் குறையாது என்றும் கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர்.

தலைப்பு செய்திகள்

Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget