Southern Railway: சரக்கு ரயில் விபத்து; மாற்றுப் பாதையில் செல்லும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள் - முழு விவரங்கள் இதோ
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, அவ்வழியாக செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, மாற்று வழியில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விவரங்கள் இதோ..

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே, இன்று காலை சரக்கு ரயில் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பெரும் தீயை அணைப்பதற்கு தீயணைப்புத் துறையினர் போராடி வரும் நிலையில், அவ்வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எந்தெந்த ரயில்கள் எந்தெந்த பாதையில், எந்த நேரத்தில் செல்லும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
தீப்பிடித்த சரக்கு ரயில்
சென்னை துறைமுகத்திலிருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று காலை தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் பெரும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
தீவிபத்து நடந்த இடத்திற்கு அருகே உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்தின் காரணமாக, அவ்வழியாக செல்லும் 8 அதி விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாற்றுப் பாதையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எவை.?
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள பதிவில், தீ விபத்தின் காரணமாக, பாதுகாப்பு கருதி அந்த லைனில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கீழ்காணும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- காலை 5.50 மணிக்கு சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (20607).
- காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரயில் (12007).
- காலை 6.10 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்படும் கோவை விரைவு ரயில் (12675).
- காலை 7.15 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரயில் (12243).
- காலை 6.25 மணிக்கு சென்னையில் இருந்து திருப்பதிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (16057).
- காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு புறப்படும் டபுல்டெக்கர் விரைவு ரயில் (22625).
- காலை 7.40 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு புறப்படும் பிருந்தாவன் விரைவு ரயில் (12639).
- காலை 9.15 மணிக்கு சென்னையில் இருந்து மகாராஷ்டிராவின் நாகர்சோல் செல்லும் விரைவு ரயில் (16003).
Train Service Alert!
— Southern Railway (@GMSRailway) July 13, 2025
Due to a fire incident near #Tiruvallur overhead power has been switched off as a safety measure. This has led to changes in train operations.
Passengers are advised to check the latest updates before travel.#SouthernRailway #PassengerAlert pic.twitter.com/CKYK8vUm87
எனினும், இந்த ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.
இது மட்டுமல்லாமல், பல ரயில்களின் ரத்து மற்றும் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் விவரங்களை, பல்வேறு பதிவுகளின் மூலம் தெற்கு ரயில் வே அறிவித்துள்ளது. அந்த பதிவுகளை கீழே காணலாம்.
Following the fire accident near Tiruvallur Overhead power supply has been put off as safety precautions. All efforts have been taken to put off the fire, hence the following changes have been made in the pattern of train services#SouthernRailway pic.twitter.com/nEofQzTNH7
— Southern Railway (@GMSRailway) July 13, 2025
மற்றொரு பதிவு...
Train Service Alert
— Southern Railway (@GMSRailway) July 13, 2025
Due to a fire incident near Tiruvallur, overhead power has been switched off as a safety measure. Changes have been made in train services.
Passengers are requested to plan their travel accordingly#SouthernRailway pic.twitter.com/BPzdKFGBDL
மேலும் ஒரு பதிவில், மாற்று பாதையில் இயங்கும் ரயில்களின் விவரம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
Following the fire accident near #Tiruvallur Overhead power supply has been switched off as a safety precaution. All efforts have been taken to put off the fire.
— Southern Railway (@GMSRailway) July 13, 2025
Consequently, the following are changes in the pattern of train services:#SouthernRailway pic.twitter.com/aeHgs2yZH2
இதோடு, கடந்த ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.
Following the fire accident near Tiruvallur Overhead power supply has been
— Southern Railway (@GMSRailway) July 13, 2025
switched off as a safety precaution. All efforts have been taken to put off the
fire.
Consequently, the following are changes in the pattern of train services: pic.twitter.com/cqGRdeVF85
இந்த பதிவுகளிலிருந்து, ரயில்களின் இயக்கம் குறித்த விவரங்களை அறிந்துகொண்டு, அதற்கேற்றவாறு பயணிகள் தங்கள் பயணங்களை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





















