மேலும் அறிய
Bread Rava Kesari : ரவா கேசரியில் பிரட் சேருங்க.. சுவை வேற மாதிரி இருக்கும்!
Bread Rava Kesari : பிரெட்டும் ரவையும் வீட்டில் இருந்தால் வெறும் 20 நிமிடங்களில் இந்த சுவையான கேசரி செய்து விடலாம்.

பிரட் ரவா கேசரி
1/6

தேவையான பொருட்கள்: பிரட் - 5 துண்டுகள், ரவை - 1/2 கப், தண்ணீர் - 3 கப், சர்க்கரை - 1 1/2 கப், பால், கேசரி பொடி, நெய் - 3 மேசைக்கரண்டி, ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, நெய், முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை.
2/6

செய்முறை : முதலில் பிரட் துண்டுகளை சின்ன சின்ன நறுக்கி மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு கடாயில் ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
3/6

அடுத்தது கடாயில் பிரட் தூளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
4/6

அடுத்தது கடாயில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் ரவை சேர்த்து வேகவைக்கவும். ரவை வெந்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
5/6

பின் பிரட் தூளை சேர்த்து நன்கு கிளறிவிடவும். அதன்பிறகு பாலில் கேசரி பொடியை மிக்ஸ் செய்து ரவையுடன் சேர்க்கவும்.
6/6

அடுத்தது நெய், முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கினால் சுவையான பிரட் ரவை கேசரி தயார்.
Published at : 21 Aug 2024 11:24 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion