ICAI CA Results: என்னாது? சிஏ தேர்வில் வெறும் 14% தேர்ச்சிதானா? முதலிடம் பிடித்த ஹைதராபாத் மாணவி- விவரம்!
ICAI CA Results 2025: முதல் குரூப் சிஏ இடைநிலைத் தேர்வை 108187 மாணவர்கள் எழுதினர். அதில், 15332 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது 14.17 சதவீதத் தேர்ச்சி ஆகும்.

சிஏ முதல்நிலைத் தேர்வு, இடைநிலைத் தேர்வு முடிவுகளை ஐசிஏஐ வெளியிட்டுள்ளது. இதில் முதல் குரூப் இடைநிலைத் தேர்வை 108187 மாணவர்கள் எழுதினர். அதில், 15332 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது 14.17 சதவீதத் தேர்ச்சி ஆகும்.
அதேபோல இரண்டாம் குரூப் இடைநிலைத் தேர்வை 80368 மாணவர்கள் எழுதினர். அதில், 17813 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 22.16 சதவீதத் தேர்ச்சி ஆகும்.
இரண்டு குரூப் தேர்வையும் 48261 மாணவர்கள் எழுதிய நிலையில், அதில் 6781 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது வெறும் 14.05 சதவீதத் தேர்ச்சி ஆகும்.
யார் முதலிடம்?
சிஏ இடைநிலைத் தேர்வில் அகில இந்திய அளவில், தீபான்ஷி அகர்வால் என்னும் மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், 600-க்கு 521 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது 86.83 சதவீதம் ஆகும்.
அதேபோல தோத்தா சோமநாத் சேஷாத்ரி நாய்டு என்னும் விஜயவாடா மாணவர், 516 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்து உள்ளார். தொடர்ந்து, ஹத்ராஸைச் சேர்ந்த சர்தக் அகர்வால் என்னும் மாணவர் தேசிய அளவில் 3ஆம் இடத்தில் உள்ளார். இவர் 600-க்கு 515 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது 85.83 சதவீதம் ஆகும்.
சிஏ முதல்நிலைத் தேர்வு தேர்ச்சி விகிதம்
சிஏ முதல்நிலைத் தேர்வை மொத்தம் 1,10,887 மாணவர்கள் எழுதி இருந்த நிலையில், 23,861 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 21.52 சதவீதம் ஆகும். இவர்களுக்கு 533 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பட்டயக் கணக்காளர் பணியில் சேர இந்தத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. சிஏ முதல்நிலை மற்றும் இடைநிலைத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சிஏ தேர்வு முடிவுகளை காண்பது எப்படி?
- தேர்வர்கள் அதிகாரப்பூர்வ ஐசிஏஐ இணைய தளமான icai.org அல்லது caresults.icai.org அல்லது icai.nic.in என்ற இணைப்பில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்யவும்.
- முகப்புப் பக்கத்தில், ரிசல்ட் என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- லாகின் செய்யத் தேவையான விவரங்களை உள்ளிடவும்.
- சப்மிட் செய்து, மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
மேலும் தேர்வர்கள் icai.nic.in மற்றும் icaiexam.icai.org ஆகிய இணைய தளங்களை அவ்வப்போது பார்த்து, தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

