Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!
மெரினா கடற்கரையில் இரவில் ஆண் நண்பருடன் அமர்ந்திருந்த பெண்ணிடம் கணவன்-மனைவியா என காவலர் விசாரித்ததால் அப்பெண் காவலரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் கடல் மணலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பட்டினம்பாக்கம் ரோந்து காவலர் ஒருவர் அமர்ந்திருந்த இளம்பெண்ணிடம் நீங்கள் கணவன்- மனைவியா என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் கணவன்-மனைவியா என கேட்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட, இரவு நேரத்தில் ஆணுடன் இருட்டில் உட்காரக்கூடாது என காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இளம்பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளை தனது சமூக வலைதளங்களில் பரவி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். யார் இதற்கு அதிகாரம், இப்படி கேட்க சட்டத்தில் இடமுள்ளதா என பதிவிட்டுள்ளார்..
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட காவலரை சஸ்பெண்ட் செய்து காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.





















