மேலும் அறிய

Gold Rate: இது அநியாயமா இல்ல.?! இறங்கும்போது கம்மியா இறங்குது.. ஏறும்போது அதிகமா ஏறுது.. தங்கம்

இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், ஒரு வாரத்தில் 1000 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை, ஒரே நாளில் இவ்வளவு அதிகரித்துள்ளது அநியாயமாக உள்ளதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, மீண்டும் 64 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. தங்கத்தின் விலை குறையும்போது குறைந்த அளவிலும், அதிகரிக்கும் போது அதிக அளவிலும் இருப்பது, அநியாயமாக இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

ஒரு வாரத்தில் ரூ.1000 குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த பிப்ரவரி 25-ம் தேதி சவரனுக்கு உச்சபட்ட விலையான 64,600 ரூபாய்கு சென்றது. அதன் பின்னர் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்தது. 26-ம் தேதி சவரனுக்கு 200 ரூபாயும், 27-ம் தேதி சவரனுக்கு 320 ரூபாயும், 28-ம் தேதி சவரனுக்கு 400 ரூபாயும், மார்ச் 1ம் தேதி சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 63,520 ரூபாயாக விற்பனையானது. அதன் பின்னர் அதே விலையில் நீடித்து வந்தது. இதன் மூலம், கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்தது.

மீண்டும் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை 560 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 70 ரூயாய் அதிகரித்து, ஒரு கிராம் மீண்டும் 8,000 ரூபாயை தாண்டி, 8,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் மீண்டும் 64,000 ரூபாயை கடந்து 64,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிகரிப்பு

இதேபோல், வெள்ளி விலையும் இன்று ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 25-ம் தேதி வெள்ளியும் அதன் உச்ச விலையாக கிராமிற்கு 108 ரூபாயை தொட்டது. அதன் பின்னர், 26, 27-ம் தேதிகளில் 2 ரூபாய் குறைந்து 106 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து 28, மார்ச் 1,2 தேதிகளில் மேலும் ஒரு ரூபாய் குறைந்து, 105 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று(03.03.25) ஒரு ரூபாய் உயர்ந்து 106 ரூபாய்க்கு வந்த வெள்ளியின் விலை, இன்று கிராமிற்கு மேலும் ஒரு ரூபாய் உயர்ந்து 107 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி, 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை ஏற்றம் குறித்து ஆதங்கப்படும் பொதுமக்கள்

கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து வந்ததால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை 560 ரூபாய் உயர்ந்துள்ளது. இதில் மக்கள் வருந்தும் ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு வாரத்தில் வெறும் 1000 ரூபாய் மட்டுமே குறைந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் அதில் 56 சதவீதம், அதாவது 560 ரூபாய் உயந்துள்ளது அநியாயமாக உள்ளதாக கருதுகின்றனர். 

தங்கத்தின் விலையை குறைக்கும்போது சொற்ப அளவில் குறைப்பவர்கள், அதிகரிக்கும்போது மட்டும் பெரிய அளவில் அதிகரிக்கிறார்கள் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அவர்களது இந்த ஆதங்கமும், வேதனையும், தங்கத்தின் விலையை நிர்ணயிப்பவர்களின் கவனத்திற்கு செல்லுமா.?

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Nilgiris Red Alert: ரெட் அலெர்ட் எதிரொலி; நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ரெட் அலெர்ட் எதிரொலி; நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
TVK Conference Date: தவெக மதுரை மாநாடு தேதி மாற்றம்; புதிய தேதி என்ன.? புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட தகவல்
தவெக மதுரை மாநாடு தேதி மாற்றம்; புதிய தேதி என்ன.? புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட தகவல்
Israeli Hostage: இஸ்ரேலிய பணயக் கைதியின் வீடியோ வெளியீடு; கொந்தளித்த நெதன்யாகு - ஹமாஸ் போட்ட நிபந்தனை
இஸ்ரேலிய பணயக் கைதியின் வீடியோ வெளியீடு; கொந்தளித்த நெதன்யாகு - ஹமாஸ் போட்ட நிபந்தனை
Trump Warns India: “இந்தியாவுக்கு வரிய இன்னும் ஏத்தப் போறேன்“; ட்ரம்ப் விடுத்த புதிய எச்சரிக்கை - எதுக்கு தெரியுமா.?
“இந்தியாவுக்கு வரிய இன்னும் ஏத்தப் போறேன்“; ட்ரம்ப் விடுத்த புதிய எச்சரிக்கை - எதுக்கு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்
திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru
”பாமக தலைவர் அன்புமணி தான்”தேர்தல் ஆணையம் அதிரடி!கதறும் ராமதாஸ் ஆதரவாளர்கள்! | Anbumani Vs Ramadoss
பாலியல் குற்றச்சாட்டு வாய் திறந்த விஜய் சேதுபதி சைபர் க்ரைமில் புகார் | Vijay Sethupathi Sexual Harassment

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nilgiris Red Alert: ரெட் அலெர்ட் எதிரொலி; நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ரெட் அலெர்ட் எதிரொலி; நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
TVK Conference Date: தவெக மதுரை மாநாடு தேதி மாற்றம்; புதிய தேதி என்ன.? புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட தகவல்
தவெக மதுரை மாநாடு தேதி மாற்றம்; புதிய தேதி என்ன.? புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட தகவல்
Israeli Hostage: இஸ்ரேலிய பணயக் கைதியின் வீடியோ வெளியீடு; கொந்தளித்த நெதன்யாகு - ஹமாஸ் போட்ட நிபந்தனை
இஸ்ரேலிய பணயக் கைதியின் வீடியோ வெளியீடு; கொந்தளித்த நெதன்யாகு - ஹமாஸ் போட்ட நிபந்தனை
Trump Warns India: “இந்தியாவுக்கு வரிய இன்னும் ஏத்தப் போறேன்“; ட்ரம்ப் விடுத்த புதிய எச்சரிக்கை - எதுக்கு தெரியுமா.?
“இந்தியாவுக்கு வரிய இன்னும் ஏத்தப் போறேன்“; ட்ரம்ப் விடுத்த புதிய எச்சரிக்கை - எதுக்கு தெரியுமா.?
நான் முதல்வன் திட்டத்தில் வேலை வாய்ப்பு இருக்குங்க... அருமையான சம்பளம்: உடனே அப்ளை பண்ணுங்க
நான் முதல்வன் திட்டத்தில் வேலை வாய்ப்பு இருக்குங்க... அருமையான சம்பளம்: உடனே அப்ளை பண்ணுங்க
Duraimurugan Vs Anbumani: “விவரமானவருன்னு பாத்தா, கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியலையே.?!“ - அன்புமணியை விளாசிய துரைமுருகன்
“விவரமானவருன்னு பாத்தா, கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியலையே.?!“ - அன்புமணியை விளாசிய துரைமுருகன்
Chennai Power Shutdown: சென்னையில ஆகஸ்ட் 5-ம் தேதி செவ்வாயன்று இவ்ளோ இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுதா.? முழு விவரம்
சென்னையில ஆகஸ்ட் 5-ம் தேதி செவ்வாயன்று இவ்ளோ இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுதா.? முழு விவரம்
CPM Saseendran: எளிமையின் உருவமாய் ஒரு எம்எல்ஏ; வைரலாகும் புகைப்படம் - அவர் யார், எந்த தொகுதி தெரியுமா.?
எளிமையின் உருவமாய் ஒரு எம்எல்ஏ; வைரலாகும் புகைப்படம் - அவர் யார், எந்த தொகுதி தெரியுமா.?
Embed widget