RuPay Debit Select Card: ரூபே கார்டு வச்சிருக்கீங்களா ? இலவச ஓ.டி.டி சந்தா முதல் இன்சூரன்ஸ் வரை.. மாஸ் காட்டும் ரூபே..!
RuPay Debit Select Card Benefits: ரூபே டெபிட் செலக்ட் கார்டு, வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளது.

சந்தையில் பல்வேறு டெபிட் கார்டுகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. போட்டிகள் அதிகமாகி வருவதால், வாடிக்கையாளர்களை தங்களிடம் வைத்துக் கொள்வதற்காக பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் ரூபே டெபிட் செலக்ட் கார்டு (Rupay Select Debit Card) வரும் ஏப்ரல் மாதம் மூலம் பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளது. புதிய சலுகைகளை என்.பி.சி.ஐ (இந்திய தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம்) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகைகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
சிறப்பு சலுகைகள் என்னென்ன ?
வரும் ஏப்ரல் மாதம் முதல் சலூன் கூப்பன்கள், இலவச ott டிசந்தா, கோல்ப் மைதானம், விமான நிலையம் ஓய்வு அறை, என பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
இலவச மருத்துவ பரிசோதனை
வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் ரூபே டெபிட் செலக்ட் கார்டு வைத்திருப்பவர்கள், ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒரு முறை இலவச மருத்துவ பரிசோதனை தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.
விமான நிலைய ஓய்வறை
ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் உள்நாட்டு விமான ஓய்வறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். வருடத்திற்கு இரண்டு முறை சர்வதேச விமான ஓய்வறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
விபத்து காப்பீடு
விபத்தில் மரணம் அல்லது மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும்.
இலவச கூப்பன்கள் மற்றும் ஓடிடி சந்தா
அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார் அல்லது சோனி லைவ் ஓ.டி.டி சந்தாக்கள் 10 மாதம் இலவசமாக தரப்படும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இலவச ஸ்பா அல்லது சலூன் சேவைகள் வழங்கப்படும்.
ஜிம் உறுப்பினர்கள்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இலவச ஜிம் உறுப்பினர் சேர்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.





















