Tamannaah Vijay Breakup: தமன்னாவிற்கு காதலில் தோல்வியா? விஜய்யுடன் ப்ரேக் அப்-ஆ?
Tamannaah Vijay Varma Breakup: பிரபல நடிகை தமன்னா தனது காதலன் விஜய் வர்மாவை ப்ரேக் அப் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர்களது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tamannaah Vijay Varma Breakup: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை தமன்னா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக இந்தியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
தமன்னா - விஜய் வர்மா ப்ரேக் அப்?
35 வயதான தமன்னா பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியானது. பாலிவுட் தொடர்பான நிகழ்ச்சிகளில் இவர்கள் இருவருமே இணைந்து பங்கேற்று வந்தனர். மேலும், இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இருவரும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். இதனால், இவர்கள் காதலிப்பது உறுதியானது என்றும் தகவல் வெளியானது.
கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றாக பழகி வந்த தமன்னா- விஜய் வர்மா இருவரும் தற்போது பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போட்டோக்கள் அழிக்கப்பட்டுள்ளதா?
ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் அழிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் போலியானது. இருவரும் அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அழிக்கவில்லை. 2024ம் ஆண்டு தமன்னா தனது பிறந்தநாளின்போது கோவாவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் விஜய் வர்மா மற்றும் அவரது நண்பர்கள் உள்ளனர்.
அதேபோல, விஜய் வர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தமன்னாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அப்படியே உள்ளது. இந்தியில் எடுக்கப்பட்ட லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப்சீரிஸில் தமன்னா மற்றும் விஜய் வர்மா மிகவும் நெருக்கமாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பர்கள் சொல்வது என்ன?
அதேசமயம் இவர்களுக்கு நெருக்கமான சிலர் இவர்கள் இருவரும் தங்களது காதலை முறித்துக்கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். நண்பர்களாக மட்டும் தங்களது உறவை நீடிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே இவர்கள் பிரிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் தற்போது தங்களது படங்களில் மும்முரமாக நடித்து வருகின்றனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமன்னா மற்றும் விஜய் வர்மா தரப்பினர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தமன்னா தமிழில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். மேலும், அஜித்துடன் வீரம், விஜய்யுடன் சுறா, சூர்யாவுடன் அயன், தனுஷுடன் படிக்காதவன், வேங்கை, விக்ரமுடன் ஸ்கெட்ச், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, தோழா ஆகிய பிரபல படங்களில் நடித்துள்ளார்.

