மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
வீட்டுமனைகள் பெற்ற மக்கள் தங்களது கிரையப் பத்திரம் மற்றும் பட்டா பெறுவதற்கு சிறப்பு முகாம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வீட்டுமனைகள் பெற்றவர்கள் கிரையப் பத்திரம் மற்றும் பட்டா பெறுவதற்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பட்டா, கிரையப் பத்திரம் வாங்க சிறப்பு முகாம்:
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு புறநகர் வளர்ச்சித் திட்டத்தில் மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்று கிரையப் பத்திரம் பெறுவதற்காகவும் மற்றும் கிரையப்பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் பட்டா பெறுவதற்காகவும், வருவாய்த்துறையுடன் இணைந்து 1.3.25 முதல் நடைபெற்று வருகிறது.
கடைசி நாள் எப்போது?
இந்த முகாம் வரும் 8ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாம்களில் கிரையப்பத்திரம் மற்றும் பட்டா தேவைப்படும் மக்கள் தவறாமல் கலந்துகொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
முகாம் நடைபெறும் நாள் மற்றும் திட்டப்பகுதிகளின் விவரங்கள் http://tnuhdb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம் என்று அறிவித்துள்ளனர்.
மக்கள் மகிழ்ச்சி:
தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளாக நீண்ட காலமாக வீட்டுமனைகள் கோரி வந்த மக்களுக்கு வீட்டுமனைகளை வழங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீட்டுமனைகள் வழங்கியுள்ள நிலையில் பலருக்கும் கிரையப் பத்திரமும், பட்டாவும் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மக்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.





















