மேலும் அறிய
Sakkarai Pongal : இதை மட்டும் சேருங்க.. கோயிலில் கொடுக்கும் சர்க்கரை பொங்கல் வீட்டிலே ரெடியாகிவிடும்!
Sakkarai Pongal : விசேஷ திருவிழாவில் வைக்கும் ஸ்பெஷல் சர்க்கரை பொங்கலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சர்க்கரை பொங்கல்
1/6

தேவையான பொருட்கள் : பச்சரிசி - 1/2 கப், பாசி பருப்பு - 2 டீஸ்பூன், வெல்லம் - 1 கப், தண்ணீர், நெய் - 3 டீஸ்பூன், முந்திரி பருப்புகள், திராட்சைகள், ஏலக்காய் , கற்பூரம்.
2/6

செய்முறை: முதலில் குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் பாசி பருப்பை 2 நிமிடம் வறுக்கவும்.
3/6

2 நிமிடத்திற்கு பிறகு பச்சரிசி சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். அதன் பிறகு 2 1/ 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி குக்கரை மூடி 3 விசில் வரும் வரை காத்திருக்கவும்.
4/6

சர்க்கரை பாகு செய்ய ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி வெல்லத்தை சேர்த்து பாகாக காய்ச்சிக்கொள்ளவும்.
5/6

காய்ச்சிய வெல்ல பாகை பச்சரிசியில் சேர்த்து வேகவிடவும். அதன் பிறகு ஏலக்காய், ஒரு சிட்டிகை கர்ப்பூரம் சேர்த்து நன்கு கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
6/6

கடைசியாக முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து சர்க்கரை பொங்கலில் சேர்த்து கிளறிவிட்டால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.
Published at : 20 Jul 2024 11:55 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















