மேலும் அறிய

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?

ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரொமாண்டிக் காமெடி திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். பவிஷ் , மேத்யு தாம்ஸ் , அனிகா சுரேந்தர், பிரியா பிரகாஷ் வாரியர் , ரம்யா ரங்கநாதன் , ஆடுகளம் நரேன் , சரண்யா பொன்வண்ணன் , சரத்குமார் ஆகியோர் படத்தில் நடித்துள்ளார்கள். பிரியங்கா மோகன் , ஜி.வி பிரகாஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இன்று பிப்ரவரி 21 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.

ஒரு வழக்கமான காதல் கதை தான் NEEK. நாயகன் பிரபு காதல் தோல்வியில் சூப் பாயாக திரிகிறான். அவனை இதில் இருந்து வெளியில் கொண்டு வர ஒரு பெண்ணை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள் அவனது பெற்றோர்கள். அரை மனதாக பெண் பார்க்க செல்லும் பிரபு சந்திப்பது தனது ஸ்கூல் மேட் பிரியா பிரகாஷ் வாரியரை. இருவரும் கொஞ்ச நாள் பேசி பழகிய பின் கல்யாணம் பண்ணிக்கலாமா வேண்டாமா என்கிற முடிவுக்கு வர திட்டமிடுகிறார்கள். சரியாக திருமணத்திற்கு ஓக்கே சொல்ல இருக்கும் நேரத்தில் அவனது எக்ஸ் அனிகா சுரேந்தர் திருமண பத்திரிக்கை அவனுக்கு வந்து சேர்கிறது. 

ஃபிளாஷ்பேக் ஓபன் ஆக செஃப் ஆக வேண்டும் என்கிற கனவில் இருக்கும் பிரபுவும் பெரிய பணக்கார வீட்டு பெண்ணான நிலாவும் சந்தித்து கொள்கிறார்கள். அதான் நாயகன் செஃப் ஆச்சே. சமைத்து கொடுத்த ஹீரோயினை இம்பிரச் செய்கிறான். இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. பிரபுவின் வீட்டில் கிரீன் சிக்னல் தருகிறார்கள். ஆனால் நிலாவின் அப்பாவாக வரும் சரத்குமார் ரெட் சிக்னல் போடுகிறார். பிரபுவும் நிலாவும் எதனால் பிரிந்தார்கள் ? இருவரும் மறுபடியும் சேர்ந்தர்களா ? அல்லது பிரபு தனது வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டாரா என்பதே படத்தின் கதை. 

காதலைப் பற்றிய படங்களில் கதை ரீதியாக புதிதாக எதுவும் சொல்லிவிட முடியுமா என்பது கேள்விதான். முடிந்த அளவிற்கு உணர்ச்சிகளை எவ்வளவு நுட்பமாக ஆடியன்ஸுடன் தொடர்பு படுத்த முடியும் என்பதே காதல் கதைகளின் பெரிய சவால். அதிலும் குறிப்பாக இன்றையத் தலைமுறையின் காதல் என்பது இன்னும் சிக்கலான ஒரு டாஸ்க். உண்மையைச் சொல்லப் போனால் இது எதைப் பற்றியும் பெரிதாக கவலையே படாமல் ஒரு வழக்கமான காதல் கதையை சலித்து போன டெம்பிளேட் காட்சிகளை வைத்து இன்னும் வழக்கமாக சொல்லியிருக்கிறார் தனுஷ்.

எடுத்த எடுப்பிலேயே லவ் ஃபெயிலியர் சாங் , நான் சிங்க் காமெடி , சம்பிரதாயத்திற்கு நகரும் காட்சி என செம கடுப்படிக்கிறது படம். சரி ஃபிளாஷெபேக் ஆவது புதுசா இருக்கும் என்று பார்த்தால் லாஜிக்கே இல்லாமல் நடு ராத்திரி கடற்கரையில் ஹீரோயினுக்கு கருவாட்டு குழம்பு வைத்து கிரிஞ்சு செய்கிறார் நாயகன். பிரபுவாக நடித்திருக்கும் பவிஷ் வாத்தியார் சொல் தட்டாத மாணவன் மாதிரி உடன்மொழியில் இருந்து எல்லாத்தையும் அப்படியே தனுஷை பிரதிபலிக்கிறார். ஹீரோயின் அனிகா தன்னை நயன்தாராவாகவே ஃபீல் செய்து நடிக்கிறார். மலையாள படங்களில் கெத்தாக சுற்றிக் கொண்டிருந்த மேத்யு தாமஸ் காமெடியனாக முயற்சி செய்து தன்னைதானே டேமேஜ் செய்துகொள்கிறார். இப்படி ரசமா , காஃபியா என்றே தெரியாத அளவிற்கு தான் முதல் பாதி போகிறது. மிச்சத்தை குடித்துவிட்டு டாட்டா சொல்லி கிளம்பலாம் என்றுதான் இரண்டாம் பாதியில் அமர்கிறோம்.

எப்படியாவது தன்னுடன் சேர்ந்து விடுவார் என்கிற எதிர்பார்ப்பில் தனது எக்ஸ் திருமணத்திற்கு செல்கிறார் பிரபு. ஒரு சீனாவது தேறிடாதா என்கிற எதிர்பார்ப்பில் நாம். முதல் பாதிக்கு இரண்டாம் பாதி பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வெட்டிங் பிளானராக வரும் ரம்யா ரங்கநாதன் கதையை கொஞ்ச எங்கேஜிங்காக கொண்டு போகிறார். மேத்யு தாமஸின் லவ் ஏங்கிள் கதையில் கொஞ்சம் சகித்துகொள்ள கூடிய காமெடியை சேர்க்கிறது. கோல்டன் ஸ்பேரோ பாடல் வைபை கொஞ்சம் ஏற்றுகிறது. ஆனால் இங்கேயும் கிரிஞ்சு காட்சிகளில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது மக்களே. க்ளைமேக்ஸ் எமோஷனலாக முடிக்காமல் காமெடியாக முடித்தது ஒரு நல்ல முடிவு. எடுக்கிறோமோ இல்லையோ எல்லா படத்திற்கு இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுப்பது தான் ட்ரெண்ட். அந்த வகையில் இந்த படத்திற்கும் இரண்டாம் பாகம் உண்டு.

பவிஷ் மற்றும் மேத்யு தாம்ஸ் இடையிலான சில காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. கோல்டன் ஸ்பேரோ பாடலில் ரம்யா ரங்கநாதன் போடும் ஸ்டெப்ஸிற்கு நிச்சயம்  விசில் அடிக்க தோன்றும். படத்திற்கு தேர்வு செய்த லொக்கேஷன் மற்றும் ஆடைகள் கண்களை உறுத்தாதபடிக்கு இருந்தன. ஜி.வி யின் பின்னணி இசை மற்று பாடல்கள் சிறப்பு. அவ்வப்போது வரும் சில வசனங்களுக்கான கைதட்டல்களை மனதார கொடுக்கலாம்.

கதை சுமார் தான் என்றாலும் நல்ல நடிப்பு நிச்சயம் ரசிகர்களை கனெக்ட் செய்யும். ஆனால் ஹீரோ ஹீர்யோயின் இருவரும்  படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை கதைக்கு சம்பந்தமில்லாதவர்களாக தெரிகிறார்கள். தனுஷை  உடல்மொழி , டயலாக் டெலிவரி ரசிகர்களுக்கு நன்றாக பரிச்சயமானதாக இருக்கும் போது தன்னைப் போலவே பவிஷை நடிப்பதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். அனிகாவிடமும் அதே பிரச்சனை தங்களது இயல்பில் இருந்து கதாபாத்திரங்களை வெளிப்படுத்தாமல் சீனியர் நடிகர்களை போலி செய்வதால் ஆடியன்ஸ் படத்தை விட்டு இன்னும் விலகிதான் போகிறார்கள். மேத்யு தாம்ஸ் ஒரு ஆள் இல்லை என்றால் இந்த கருமத்த தான் விடிய விடிய ஒட்டிக்கிட்டு இருந்தியா என்கிற நிலமை தான்

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
Jana Nayagan Audio Launch: திடீரென ஓடிய விஜய்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget