(Source: ECI | ABP NEWS)
Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்து படிப்படியாக முன்னேறி இன்றைக்கு அதே டெல்லியின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் ஒரு பெண்.. அவர் தான் ரோகா குப்தா.
அண்மையில் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. இச்சூழலில் டெல்லின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி நிலவியது.
இந்த நிலையில் தான் டெல்லி முதலமைச்சராக ரோகா குப்தாவை பாஜக அறிவித்துள்ளது. ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தின் நந்த்கர் கிராமத்தில் 1974 ஆம் ஆண்டு பிறந்தவர் ரோகா குப்தா.வழக்கறிஞரான ரோகா குப்தா 1996 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (DUSU) தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர்.
பின்னர் நகராட்சி அரசியலில் நுழைந்தார், 2007 இல் உத்தரி பிதம்புராவில் இருந்து டெல்லி கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றார். மீண்டும் 2012 ஆம் ஆண்டு அதே பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தெற்கு டெல்லி மாநகராட்சியின் மேயராகவும் பணியாற்றியதன் மூலம் பாஜக தலைவர்களின் நம்பிக்கையை பெற்றார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த இவர் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளரை 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடையைச் செய்தார். இச்சூழலில் தான் ரோகா குப்தா டெல்லி முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளர். துணை முதலமைச்சராக பர்வேஷ் சர்மா இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





















