மேலும் அறிய
Mushroom Dosa: ஆரோக்கியமான காளான் மசாலா தோசை - ரெசிபி இதோ!
Mushroom Dosa: இதோ உங்களுக்காக காளான் மசாலா தோசை எப்படி செய்வது எளிதான செய்முறை காணலாம்.

தோசை
1/5

காளான் மசாலா தோசை: என்னென்ன தேவை?, தோசை மாவு - தேவையான அளவு, காளான் - 2 கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, வெங்காயம் - 2, தக்காளி - 2, மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன், சீரக தூள் - ஒரு டீஸ்பூன். கரம் மசாலா - ஒரு டீஸ்பூன், இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, நெய் - தேவையான அளவு,சீஸ் - தேவையான அளவு
2/5

முதலில் தோசைக்கு தேவையான மசாலாவை தயார் செய்து வைக்கலாம். வெங்காயம் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். இப்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கூடானதும், அதில் சீரகம்,பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
3/5

அதன் பிறகு, தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியதும் உப்பு, மிள்காய் தூள், அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதற்கு ஃப்ர்ஷ் க்ரீன்,சீஸ் கூட தேவையெனில் சேர்க்கலாம். ருசி நன்றாக இருக்கும். விருப்பம் இருப்பவர்கள் இரண்டு உருளைக்கிழங்கை வேகவைத்து சேர்க்கலாம்.
4/5

5 நிமிடங்கள் கொதித்ததும் அதில் நறுகிய காளான் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இது நன்றாக கொதித்ததும் காளான் மசாலா தயார்.
5/5

காளான் மசாலா தோசை தயாரிக்க..தோசை கல்லில் தோசை ஊற்றி, அதன் மேல் காளான் மசாலா வைத்து தோசை பொன்னிறமாக வேக விடவும். சுவையான காளான் மசாலா தோசை தயார். நெய் சேர்த்து தோசை தயாரிப்பது நல்லது.
Published at : 22 Dec 2024 02:26 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion