மேலும் அறிய
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
மூக்குத்தி அம்மன் 2 படத்தின், பூஜை குறித்த தகவலை தற்போது படக்குழு வீடியோவுடனே அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் பூஜை மார்ச் 6 ஆம் தேதி துவங்குகிறது
1/5

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் 2020-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கியது மட்டுமின்றி, இப்படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், அபி நட்சத்திரா, மௌலி, பி எஸ் ஆர் சீனிவாசன், அஜய் கோஸ், எல் ஆர் ஈஸ்வரி, மயில்சாமி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
2/5

நடிகை நயன்தாரா முதல்முறையாக டிவோஷ்னல் மற்றும் ஃபேண்டஸி காமெடி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்து காணப்பட்ட நிலையில், கொரானா பிரச்சனை காரணமாக, டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. மேலும் இந்த படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
Published at : 04 Mar 2025 09:29 PM (IST)
மேலும் படிக்க





















