மேலும் அறிய
Dahi Paneer Recipe: சுவையான தஹி பன்னீர் மசாலா - எப்படி செய்வது?
Dahi Paneer Recipe: பனீர் விரும்பி சாப்பிடுபவர்கள் இப்படி செய்து பாருங்கள்.

பனீர்
1/6

தேவையான பொருட்கள் பன்னீரை வறுக்க பன்னீர் - 400 கிராம் உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கசூரி மேத்தி - 1 டீஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன்..
2/6

தயிர் கலவை செய்ய தயிர் - 500 கிராம் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் தூள் - 1 டீஸ்பூன் தனியா தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் உப்பு - 1 ட்தேவையான அளவு தஹி பன்னீர் செய்ய எண்ணெய் - 3 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பிரியாணி இலை டீஸ்பூன் வெங்காயம் - 2 நறுக்கியது பூண்டு விழுது - 1 டீஸ்பூன் இஞ்சி விழுது - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் முந்திரி விழுது - 1/2 கப் தயிர் கலவை வறுத்த பன்னீர் பச்சை மிளகாய் - 2 கீறியது
3/6

பன்னீரை துண்டுகளாக வெட்டி அவற்றுடன் உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் கசூரி மேத்தி சேர்த்து நன்கு கலக்கவும். அதை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். தயிர் கலவைக்கு ஒரு பெரிய கிண்ணத்தில் தயிர் எடுத்து மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கவும்.
4/6

ஒரு கடாயில், நெய், ஊறவைத்த பன்னீர் சேர்த்து நன்கு வறுத்து தனியே வைக்கவும். ஒரு அகன்ற கடாயை எடுத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சீரகம், பிரியாணி இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, நல்ல பொன்னிறமாக வதக்கவும்.பூண்டு விழுது மற்றும் இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5/6

பிறகு தயிர் கலவையை சேர்த்து அடுப்பை அணைக்கவும். தயிர் கலவையை விரைவாக கிளறவும். மீண்டும் அடுப்பை பற்ற வைத்து, தயிர் கலவையை 5 நிமிடங்கள் தொடர்ந்து கிளறவும். தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். கடாயை மூடி மேலும் 5 நிமிடங்கள் சமைக்கவும்.
6/6

முந்திரி விழுதை சேர்க்கவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்க்கவும். பச்சை மிளகாய் கீறி சேர்க்கவும். கடாயை மூடி மேலும் 3 நிமிடங்கள் சமைக்கவும். கசூரி மேத்தி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒன்றாக கலக்கவும். சுவையான தஹி பன்னீர் பரிமாற தயாராக உள்ளது.
Published at : 28 Nov 2024 02:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion