CM Stalin: ஒரு பெண்ணுக்காக நிகழ்ச்சிக்குச் செல்லாமல் காத்திருந்த முதல்வர் ஸ்டாலின்; அமைச்சர் அன்பில் ருசிகரம்!
ஒரு பெண்ணுக்காக நிகழ்ச்சிக்குச் செல்லாமல், நின்று வருகிறார் என்று சொன்னால், கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்தவர் நம் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் அன்பில்.

தேர்வெழுதும் மாணவர்கள் பள்ளிக்குச் சென்ற பிறகே கிளம்புவேன் என்று சொல்லி முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்குச் செல்லாமல் காத்திருந்ததாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நாகையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
7 தலைமுறை மாணவர்களும் பயன்பெறுவார்கள்
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டு பேசும்போது, ’’சுமார் 7 மணி நேரம் பயணம் செய்து நாகைப் பயணத்தை நீங்கள் (முதல்வர் ஸ்டாலின்) திட்டமிட்டுள்ளீர்கள். இதன்மூலம் 7 தலைமுறை மாணவர்களும் பயன்பெறுவார்கள்.
இன்று நிகழ்ச்சிக்குச் செல்ல முதல்வர் தயாராகிவிட்டார். ’போகிற வழியில் கும்பல் இருக்குமே? குழந்தைகள் எல்லோரும் கிளம்பிய பிறகு சொல்லு, அதன்பிறகே கிளம்புவேன்’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
’எல்லோரும் வந்துவிட்டார்கள்’ என்றேன். ’எல்லோரும் வந்துவிட்டார்களா’ என்று மீண்டும் கேட்டவரிடம் ’ஒரு பெண் மட்டும் வர வேண்டி இருக்கிறது’ என்றேன். ’அந்தப் பெண்ணும் சென்றபிறகுதான் கிளம்புவேன்’ என்று முதல்வர் காத்திருந்தார்.
அப்படி வாசுவ தத்தா என்னும் பெண் நடராஜன் தமயந்தி பள்ளிக்குச் சென்றுவிட்டார் என்று அறிந்தபிறகுதான் முதல்வரின் வண்டி நகர்ந்தது. ஒரு பெண்ணுக்காக நிகழ்ச்சிக்குச் செல்லாமல், நின்று வருகிறார் என்று சொன்னால், கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்தவர் நம் முதல்வர்.
மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவைத்த பிறகே பிறந்தநாள் கொண்டாட்டம்
அவர் தன்னுடைய பிறந்த நாளன்று வாழ்த்து சொல்வதற்காக தலைவர்கள் அனைவரும் காத்திருந்தபோது, அரசுப் பள்ளிக்குச் சென்று மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவைத்த பிறகே, அறிவாலயம் சென்றார்.
கல்வியும் சுகாதாரமும் தன்னுடைய இரு கண்கள் என சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் முதல்வர் ஸ்டாலின் காட்டுகிறார்’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

