மேலும் அறிய
மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு எண்டு கார்டு போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் முத்து!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக பிரபலமான ஸ்டாலின் முத்து. தாப்ரோது தனது மனைவி மற்றும் மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சில வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகரின் குடும்ப புகைப்படம் வைரல்
1/4

தேனியில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் ஸ்டாலின் முத்து. இயக்குநர் பாரதிராஜாவின் உறவினர். கனா காணும் காலங்கள் மூலமாக நடிகராக அறிமுகமான இவர், அதன் பிறகு தான் பாரதிராஜா தன்னுடைய தெக்கத்திப் பொண்ணு என்ற சீரியலில் நடிக்க வைத்தார். கலைஞர் தொலைக்காட்சியில் 2008 முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த சீரியலில் அவரது பேச்சு தான் ரசிகளிடையே வரவேற்பு பெற்றது.
2/4

அதன் பிறகு சரவணன் மீனாட்சி, 7சி, பாசமலர், ஆண்டாள் அழகர், மாப்பிள்ளை, பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று பல சீரியல்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல் என்றால் அது அம்மா, அப்பா, மகன், மகள், மருமகள் என்று ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தான். முதல் சீசன்களில் அண்ணன்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது 2ஆவது சீசன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
Published at : 04 Mar 2025 10:44 PM (IST)
மேலும் படிக்க



















