ICAI CA Results: ஆடிட்டர் பணிக்கான சிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
ICAI CA Results January 2025: ஐசிஏஐ சிஏ இடைநிலைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.

ஆடிட்டர் பணியில் சேர நடத்தப்படும் சிஏ இண்டர்மீடியட் தேர்வு முடிவுகளை ஐசிஏஐ வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் https://icai.nic.in/caresult/ipc/ என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம்.
ஆடிட்டர் எனப்படும் பட்டயக் கணக்காளராக விரும்பும் மாணவர்களுக்கு, இந்தியாவில் 3 நிலைகளில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தகுதித் தேர்வை ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களே ஆடிட்டர் ஆக முடியும். இவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.
3 கட்டத் தேர்வு
சிஏ தகுதித் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் தேர்வு நடத்தப்படுகிறது. அதேநேரத்தில் பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதல்நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை. இடைநிலை மற்றும் இறுதித் தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.
இந்த நிலையில் ஐசிஏஐ சிஏ இடைநிலைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.
தேர்வு முடிவுகளை காண்பது எப்படி? (Steps to check the ICAI CA Inter Result 2025)
- தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐசிஏஐ தளமான icai.org அல்லது caresults.icai.org அல்லது icai.nic.in என்ற இணைப்பில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்யவும்.
- முகப்புப் பக்கத்தில், ரிசல்ட் என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- லாகின் செய்யத் தேவையான விவரங்களை உள்ளிடவும்.
- சப்மிட் செய்து, மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.






















